உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 7.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம்

7

குற்றம் செய்து அதன்பின் தன்னைக் காப்பதா? குற்றம் செய்யாமல் இருப்பது காப்பதா?

குற்றம் வருவதற்கு முன்னரே அது வராமல் காப்பதே காப்பாகும். அவ்வாறு காவாதவன் வாழ்வு, தீயின்முன் வைக்கப் பட்ட வைக்கோற் போர் அழிவது போல் அழிந்து விடும்.

66

'வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்'

(435)

அலுவல் தலைவன் அப்பொறுப்புக்குத் தக்கவனாகத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளல் தலையாய கடமை தான் இருக்கும் பொறுப்புக்கு இழிவுண்டாகச் செய்வான் நன்மகன் அல்லன்; தலைவனும் அல்லன்! தகவாளன் ஒருவன் இருந்த இருக்கை அத்தகுதியால் வணக்கத்திற்கு உரியது ஆகிவிடும். அந்த இருக்கையில் இன்னொருவன் இருக்கும் நிலை உண்டாகும் போதே 'இத்தகைய பெருமகன் இருந்த இருக்கை’ என்னும் பெருமிதமும் தூய்மையும் உண்டாதல் வேண்டும். அதனால்,

தன் குற்றம் நீக்கல் முதற் கடமை; பிறர் குற்றம் களைதல் அடுத்த கடமை; இவ்வாறு செய்தால் அவன் ஆளுகைக்குள் என்ன குற்றமும் நிகழாது. 'பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்' என்பது வழக்கு.

66

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு”

இறைக்கு என்பது இவண் அலுவலகத் தலைவனுக்கு.

(436)

அலுவல் பொறுப்பாளன் ஒருவனுக்கு வேண்டும் குணம் என்பது தற்பெருமை கொள்ளாமை. கொண்டால் அலுவலகத்தார் அனைவர் நல்லெண்ணத்தையும் இழந்து விடுவான். மண்டைக் கனம் பிறரை மதிக்க அறியாது; மற்றையோர் மதிக்கும் பேற்றைக் கொள்ளவும் கொள்ளாது!

6

எந்த ஓர் அலுவலக நல்லியக்கமும் பலர் ஒத்துழைப்பில் யல்வதே. தனியாளாகத் தம்மைக் கொண்டு விட்டால் அனைவரும் தங்கள் தலையைப் பொறுப்பில் இருந்து எளிதாகக் கழற்றிக் கொள்வர். பின்னர், மாட்டிக் கொண்டு மன்றாடும் நிலைக்கு வந்தே தீர வேண்டும்.

மெழுகு, 'நான் உருகுவதால்தான் ஒளி உண்டாகிறது”

என்றது.