உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 7.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

திருக்குறள் ஆராய்ச்சி - 2

5

திரி, ‘நான் கருகுவதால்தான் ஒளி உண்டாகிறது” என்றது. தீ, ‘நான் எரிவதால்தான் ஒளி உண்டாகிறது' என்றது.

மூன்றும் முரணி நின்றன.

காற்று வலுவாய் அடித்தது, மெழுகு திரி அணைந்தது. மூன்றும் கேட்டன; காற்றே ஏன் அணைத்தாய்?

"மூவரும் கூடிக் கேட்டீர்! முன்னே என்ன செய்தீர்?

மூவரும் நான் நான் எனச் செருக்கினீர்! நானும் உள்ளேன் என்பதை நான் காட்டினேன்!

நானெனல் ஒழிக! நாமெனச் சுடர்க!

என்றது காற்று. நானெனல் ஒழிந்தது, அலுவலகம்! நாமெனச் சுடர்வது, அலுவலகம்.

நானெனல் ஒழிதல் ஒன்று; நலஞ் செய்யாச் செயல் எதனையும் செய்யாமை மற்றொன்று.

66

‘வியவற்க எஞ்ஞான்றும் தன்னை, நயவற்க நன்றி பயவா வினை

தெரிந்து செயல் வகை

(439)

அலுவலர் எவரும் எச்செயலைச் செய்யத் தொடங்கு முன்னரும் அதன் நடைமுறை, விதிமுறை, முன்னவர் பட்டறிவு, அச்செயலைச் செய்யும் வகை, செய்வதன் விளைவு என்பவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்துச் செய்தல் வேண்டும். அத் தெளிவுக்குத் தெளிவாக அமைந்தது வள்ளுவத் தெரிந்து செயல் வகை (47)

ஒரு செயலைச் செய்யத் தொடங்கு முன் அதனைச் செய்தால் உண்டாகும் கேட்டையும், நன்மையையும் தொடர்ந்து அரசுக்கு வரும் வருவாயையும் ஆராய்ச்சி செய்தல் வேண்டும்.

66

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்’

(461)

எடுத்துக் கொள்ள இருக்கும் செயலைப்பற்றி நன்கு தெரிந்தவர்களோடு ஆராய்ந்து, பலவகையாலும் தாமும் எண்ணிச் செய்பவர்க்குச் செய்தற்கு அரியது என எதுவும் இல்லை.