திருக்குறள் கதைகள்
89
பாகவதருக்கு இரவுப் பொழுதில் தூக்கம் வருவதே ல்லை! பகலிலும் கற்பனைதான். பையன் இப்படி இருப்பான் இப்படி இருப்பான் என்று அவராகவே கற்பனை செய்து கொண்டார்.“அவசியம் புகைப்படம் ஒன்று எடுத்து அனுப்பிவை” என்று வள்ளியம்மைக்குக் கடிதம் எழுதினார், “அதெல்லாம் முடியாது; இங்கு வரும் வரை பொறுத்திருக்க முடியாதோ?" என்று கேலிச் சிரிப்புடன் வந்தது வள்ளியம்மை கடிதம். “என்னடா! தொல்லை! திரும்ப முடியவில்லையே” என்று ஏங்கினார். திட்டங்கள் முடியவேண்டுமே!
மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. கனவிலெல்லாம் குழந்தையின் மழலை மொழியாகவே கூறினார். உடனிருந்தவர்க ளெல்லாம் “பாகவதர் ஐயா உங்கள் மழலைப் பேச்சே தனியழகு! ஆ ஆ! இப்படியா இரவெல்லாம் உளறுவது? ப்பா ப்பா! ம்மா ம்மா!” என்று கேலி செய்தனர். “சும்மா! என் பையன் நினைவு!” என்று சமாளித்தார். “என்ன இந்த வள்ளியம்மாள், பையன் சுகத்தினை அடிக்கடி எழுத வேண்டாமோ? அதைப் பார்க்கிலும் என்னதான் வேலையாம்!" என்று வருந்தினார். “அவளுக்கென்ன மகனோடே இருக்கிறாள் இல்லையா? அந்த மகிழ்ச்சியிலே இப்பொழுதெல்லாம் என்னை நினைக்க முடியுமா? என் தலைவிதி - நாற்பது கடந்த பின்பு பிறந்தும் அவனை இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை” என்று தலையில் தலையில் அடித்துக் கொண்டார். “எங்கெங்கு கச்சேரி இருந்தாலும் சரி, இனி ஒருநாளும் இருக்கவே முடியாது! அடுத்த கச்சேரி என் வீட்டில்தான் என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டார் பாகவதர்.
"நீங்களெல்லாம் குழந்தை பெற்றவர்கள் தானா? நான் குழந்தையைப் பாராமல் வரமுடியாது என்று எவ்வளவோ சால்லியும் 'கண்டிப்பாய் வரவேண்டும் விரைவில் அனுப்பி விடுகிறோம். உங்கள் ஆவலைத் தடைபோட்டுக் கெடுத்து விடவா செய்வோம்.' என்று ஒழுங்காகப் பேசிவிட்டு ஊர் ஊராய்ச் சுற்றியலையச் செய்து கொண்டிருக்கிறீர்களே, உங்களுக்கு உணர்ச்சி இல்லையா? உங்கள் உடம்பில் உதிரம் ஓ வில்லை! உங்களுக்குப் பிள்ளை பிறந்தால் அதனை எத்தனை மாதங்கள் கழித்துத்தான் பார்ப்பீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமோ! என்ன வேண்டு L மானாலும் திட்டுங்கள் கவலையில்லை. ஒழுங்கு முறை அறிந்த வர்கள், உணர்ச்சியுள்ளவர்கள் திட்டுவதைப் பற்றித்தான்