90
இளங்குமரனார் தமிழ்வளம் - 8
எனக்குக் கவலை! நீங்கள் பிறர் நலத்தை நினைப்பவர்களா? எனக்கு வரவேண்டிய பணம் ஏழெட்டு ஆயிரங்களுக்கு மேல் இருக்கும். அதனைப் பொருட்டாக நினைத்துக் கொண்டு உங்கள் தஞ்சமாக மலேயாவில் கிடக்கப் போவதில்லை. 'என் மகன் மலர் முகத்தைக் காண்பது நூறாயிரம் ரூபா!' அவன் மழலைச்சொல் ஒன்று கேட்பது நூறு நூறாயிரம் ரூபா! தாண்டை வறளக் கத்தின காசைத் தரவேண்டுமானால் அனுப்புங்கள்! இல்லாவிட்டால் நன்றாக இருங்கள்! என்னை விட்டாலே போதும் அதுதான் செய்ய மாட்டீர்களே! என்மேல் அன்பா செலுத்துகிறீர்கள்! ஐயோ, அன்பின் பெயரால் கொன்று தின்னுகிறீர்கள்! உங்களுக்கு வணக்கம்.” என்று கடிதம் ஒன்றைத் தம்மை அழைத்துச் சென்ற கூட்டத்தினருக்கு எழுதிவைத்து விட்டு, விமானத்தில் பறந்தார் பாகவதர்.
ம
விமானத்தில் கூட அவருக்கு நடக்க ஆசை! விரைவாக ஊருக்குப் போக வேண்டும் என்றுதான்! ஆனால், எழவிடாது கட்டி வைத்து உட்காரச் செய்திருந்தது, நடக்க விடாது செய்துவிட்டது. ஆனால் புகைவண்டியில் வரும் போது மட்டும் நடந்து கொண்டார்! கொஞ்சும் மழலையைக் குளிரப் பருக
வேண்டுமல்லவா!
66
பாகவதர், வீட்டுக்கு நடந்தா வந்தார்! ஒரே ஓட்டம்! வள்ளி! வள்ளி!! பயலை எங்கே! எங்கே பயலை!” பொங்கிப் போய்க் கேட்டார். ‘அத்தான்' என்று தயங்கினாள் வள்ளி. “என்ன இப்படி அசடாக இருக்கிறாய்! மண்ணா? மரமா? பயலை எங்கே? பார்க்க ஆசை இருக்காதா? விளையாடவா செய்கிறாய்?” - சிரிப்பு கோபமாக மாறிற்று.
"அத்தான் பையன் பிறக்கு முன்னாகவே பிறந்து விட்டானா? பிறந்து விட்டானா? என்று நீங்கள் எழுதி எழுதிக் குவித்த கடிதங்களையும், அவனுக்கு இன்னின்ன மாதிரி உணவு தா, துணி மணி போடு, பேசப் பழக்கு என்று ஒவ்வொன்றாக க எழுதிக் காட்டியதையும் பார்த்துவிட்டு...
66
و,
'பார்த்துவிட்டு...’ ஆவலால் இடைமறித்தார் பாகவதர். 'ஆண்குழந்தை பிறந்ததாக எழுதினேன். ஆனால் அது பிறக்கும் போதே செத்துப்பிறந்தது. அதை எழுதி உங்களை அயல் நாட்டிலே அழப்படுத்த வேண்டுமா?”... வள்ளியம்மை வாய் அமைதியாயிற்று.
'பிறந்ததாக எழுதினேன். அது செத்துப் பிறந்தது' - ஒரே ரு முறை வாயால் கூறினார் பாகவதர். கற்சிலையாய்
ஒரு