திருக்குறள் கதைகள்
91
உட்கார்ந்து விட்டார். அவர் உள்ளக் குமுறலை இதழ்கள் பறையடித்துக் காட்டின. மூக்கு, வெதும்பும் மூச்சால் காட்டியது; கண்கள், பாவையை முழுக்காட்டிக் காட்டின. கன்னங்கள், கோட்டுப் படம் வரைந்து தெளிவித்தன. உள்ளம், எரிமலை யாகிக் காட்டிற்று. ஆம்! அவர் வாயினின்று பேச்சுவரத் திங்கள் சில ஆயின. இந்தத் துன்பப் பொழுதின் இடையே ஒரு மின்னொளி தோன்றியது. அது இதுதான். “எங்கும் தேடிக் கிடை டக்க முடியாத இன்பம் குழந்தையினி ன்பம் குழந்தையினிடம் அமைந்து கிடக்கிறது. இதனை உணர்ந்து தெளிவாக எழுதி வைத்தவர் திரு வள்ளுவர். அவர் உரையே பொய்யாவுரை.”
க
பாகவதர் மனநிலை பலருக்குக் கவலையளித்தது. வலிந்து மேடைக்கு அழைத்தனர். ஆனால் பாகவதரோ அசையவில்லை. மழலை இசை கேட்டால் அன்றிக், குழல் யாழ் இசை செய்யேன்' என்று உறுதியாக இருந்தார். இதனை வெளியே சொல்லிக் காட்டலாமா? பாகவதர் எண்ணம் பழுதுபட்டு விடவில்லை. அடுத்த ஆண்டே அவர் வீட்டில் ஒரு கச்சேரி நடந்தது! ஏன்? அவருக்குக் குழந்தை பிறந்து விட்டது அல்லவா!
கோவிந்த பாகவதர் இப்பொழுதெல்லாம் திருவள்ளுவரைத் திட்டுவது இல்லை. "திருவள்ளுவர் பெரும் இசைப்புலவர்; இல்லை யென்றால், 'பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் என்று கூற முடியுமா? இசைப்புலவனே இசை சை நுணுக்கம் அறிவான்” என்று கூறி மகிழ்வார். எந்த மேடைக்குச் சென்றாலும். “குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்’
என்னும் குறளைப் பாடிவிட்டுத்தான் கச்சேரி தொடங்குவார். பாகவதர் வெளியிடங்களிலும் நிறைய நிறையக் கச்சேரி செய்தார்! வீட்டிலும் தான் நிறையக் கச்சேரி செய்தார்!
L
“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”