94
6
இளங்குமரனார் தமிழ்வளம் – 8 $
முத்தப்பர் எந்த வேலைக்கும் போக மாட்டார். வேலைக் காரர்களை மேற்பார்க்கவும் மாட்டார். அதற்கெல்லாம் யார் யாரோ இருந்தார்கள். அது தானாக நடந்து வந்தது. விளைவுக்கும் குறைவு இல்லை. வசதிக்கும் குறைச்சல் இல்லை.
சாதாரணமாக
وو
வயில் பொழுதில் மரத்தடியில் படுத்திருப்பார் முத்தப்பர். அந்த வழியாகப் பத்துப்பேர் இல்லை. இருபது முப்பது பேர்கள் போனாலும் சரி, "வாங்க வாங்க” என்று வரவேற்பார். “ஆமாம்” என்று சொல்லி விட்டு அவர்கள் போகவும் விடமாட்டார். “வாங்க; உட்காருங்க' என்பர். “அவசரமாகப் போகவேண்டும்" என்று வந்தவர்கள் சொன்னாலும் "நல்ல அவசரம்; பிறக்கும்போது கூடவா பிறந்தது அவசரம்? வாங்கய்யா! எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்?” இப்படிக் கேள்விமேல் கேள்வி கேட்பார். வழிப்போக்கர்கள் என்ன செய்ய முடியும்? நாடறிந்த முத்தப்பர் அல்லவா வலிய அழைத்துப் பேசுகிறார்; போக முடியுமா? நின்று பேசுவர்; உட்காருவர்; அதற்குள் ஏதேதோ பண்டங்கள் இட்டிலி - தோசை - வடை - முறுக்கு எல்லாம் குவியும் - எல்லார் வாயும் மெல்லும். முத்தப்பர் வாய்மட்டும் சிறிதும் அசை போடாது. அடுத்தவர்கள் தின்பதைக் காண்பதிலே முத்தப்பருக்குக் கொள்ளை மகிழ்ச்சி! “இப்படியும் ஆட்கள் உலகில் உண்டா?” என்று முத்தப்பரை ஒரு முறை பார்த்தவர்கள் கூடப் பேசாமல் போவது இல்லை.
எத்தனை முறைகள் வந்து போனாலும் அவர்களை அடையாளமாவது அறிந்து கொள்வாரா முத்தப்பர்? நினைவாவது ஒன்றாவது? பெயர் பெற்ற மறதிக்காரர் அவர். “உம் பெயர் என்ன?” என்று திடுமென்று அவரை எவரேனும் கேட்டுவிட்டால் “என் பெயர்” “என் பெயர்” என்று திண்டாடித் திணறிக்கொண்டு இருப்பாரே அன்றி உடனே சொல்லிவிட மாட்டார். அவ்வளவு மறதி. வைத்தது வைத்ததுதான்; எடுத்தது எடுத்ததுதான். மறதிக்கு உலகப் பரிசு ஒன்று தருவதாக இருந்தால் அது முத்தப்பருக்கே உரியது என்று சொல்லி விடலாம்.
இரவுப் பொழுதில் பத்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புவார் முத்தப்பர்; சத்திரம், சாவடி, மடம் எங்கெங்கு உண்டோ அங்கங்கெல்லாம் ஏறி இறங்குவார். “ஏய், எழுந் திருய்யா" "எந்த ஊருய்யா?" என்று விசாரிப்பார். "ஏய்யா, சாப்பிட்டாயா ஐயா?” என்பார். சாப்பிட்டேன் என்றால்தான்