உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

93

ஏறும்; சுட்டித்தனமான ஒன்று அவர்மேல் சறுக்கு விளையாட்டு விளையாடும். ஆமாம்; ஆரம்பப் பள்ளி ஒன்று வைத்து நடத்துவதற்குத் தக்கபடி அவர்கள் வீட்டிலே பிள்ளைகள் உண்டு. பாகப்பிரிவினை என்றும் செய்யக் கூடாது என்று றுதிப்பத்திரம் (உயில்) எழுதிவைத்திருந்த அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் எட்டுப்பேர் பத்துப் பேர்களா? அடுப்பு மட்டும் பதின்மூன்று உண்டு! மிடாப்பானை, தாழிப்பானை, சட்டி, உலைமூடி இவற்றைப் பார்த்தாலே ஒரு குயவருக்கு நாள் தவறாமல் வேலை தந்திருக்க வேண்டும் என்று தோன்றும். அது போலவே வெண்கலப் பாத்திரங்களுக்கு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்ட குடும்பம் என்றே தோன்றும்; அதனைப் "பெருங்குடும்பம்” என்று சொல்வதைப் பார்க்கிலும் “பெருங் குணம் படைத்த பெருங்குடும்பம்” என்பதே மிகப் பொருந்தும்.

வைதாலும் சரி, வாழ்த்தினாலும் சரி முத்தப்பருக்கு ஒன்றுதான். எதற்கும் சிரிப்பதுதான் அவர் பதில். சிரிப்பும் வெடிச் சிரிப்பாக இருக்கும். பெரிய உரலொன்றைக் கட கட வென்று ஆட்டினால் என்ன கிடு கிடுப்பு ஏற்படுமோ அவ்வளவு கிடு கிடுப்புண்டு சிரிப்பில் உடல் குலுங்கச் சிரிக்கும் அவர் சிரிப்பிலே தொப்பை ஏறி இறங்கித் திருவிளையாடல் புரிவது பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கத் தவறாது. அவரைச் சூழவும் பத்துப்பேர்களாவது இல்லாவிட்டால் அவருக்கு என்னவோபோல் இருக்கும் “அவனே” “இவனே' என்று அழைத்து வைத்தாவது பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். உட்காருபவர்களுக்கும் கொள்ளை ஆசையாக இருக்குமே அன்றித் துன்பமாக இருக்காது.

L

முத்தப்பர் அதிகமாகப் பேசமாட்டார்; படிப்பும் அரை குறைதான்; ஏதோ, கையெழுத்துப் போடும் அளவுடன் அவர் படிப்புச்சரி என்று சொல்லலாம். ஆனால் பக்கத்திலிருந்து எவராவது பேசினால் போதும்; சலிப்புச் சிறிதும் இன்றிக் கேட்பார். உளறுவாயனுக்குக் கூட இன்னும் கொஞ்ச நேரம் இவரிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்னும் ஆவல் எழும்பாமல் இருக்காது. கதை சொல்லுபவன் கிடைத்து விட்டானா - அதிலும் புராண இதிகாசக் கதை சொல்லுபவன் கிடைத்து விட்டானா விடவேமாட்டார். வேறென்ன நல்லதங்காள் கதையை மட்டும் நாலாயிரம் தடவைகளாவது கேட்டிருப்பார் என்றால் ஐந்து பத்துத் தடவைகள் கூடலாம் குறையலாம் அவ்வளவுதான்.