உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் - 8 $

சேர்ப்பதிலே பெரும்பொழுதைத் தொலைத்தாள். ஒருநாள் சென்று விட்டால் பழைய பொருள் ஆகிவிடாதா? மற்றவர்கள் வியப்புடன் பார்ப்பார்களா? அவளுக்கு அடுத்தவர்கள் வியந்து பார்த்துப் புகழவேண்டும் என்பது நோக்கமாக இருந்ததன்றி அது பயன்படவேண்டும் என்பது பற்றிச் சிறிதும் கவலை இல்லையே!

"அம்மா, பொழுது போக்குக் கழகத்திற்குப் போக நேரமாகவில்லையா?” என்று ஒருநாள் நாகம்மையின் “உயிர்த் தோழிகள்" சிலர் அழைத்தனர். நாகம்மையின் மாமி உள்ளே இருமிக் கொண்டு படுத்திருந்தாள். “வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது என்றுதான் பெயர். இராத்திரியெல்லாம் ரே புகைச்சல்; காறிக் காறித் தொண்டையும் புண்ணாகி விட்டது. 'வெந்நீர் வேண்டுமா' என்று கேட்பதற்குக்கூட நாதியில்லை" என்று நோய்த் தொல்லைக்கும் முதுமைத் தளர்வுக்கும் ஆட்பட்ட அவள் புலம்பினாள். நாலுபேர் முன்னால் தன்னைப் பற்றி உரைத்ததை நாகம்மையால் பொறுத்துக் கொள்ள முடியுமா?

“உனக்குத் தொண்டை வலி இருந்தால் அந்த வேதனையிலே மற்றவர்களுக்கு மண்டை வலி வரவைத்து விடுவாய். நான் என்ன உன்வீட்டு வேலைக்காரியா? அல்லது மருத்துவத் தாதியா? ஒழுங்காக இருக்க முடியுமானால் இரு; இல்லாவிடில் உனக்கு வருவதுபோல் பார்த்துக் கொள். இங்கே ஏசிப் பேசிக்கொண்டு இருக்க முடியாது நாகம்மை விரைத்துக்கொண்டு போய் விட்டாள்.

-

மாமிக்கும் மருமகளுக்கும் அதுமுதல் பேச்சே இல்லை. மாமன் சிவசாமியும் இதனைக் கேட்டார். அதற்கு முன்பே சிலசில காரியங்களிலும், நடத்தையிலும் பேச்சிலும் நாகம்மை மேல் வெறுப்புக் கொண்டிருந்த அவருக்கு வேதனை மிகச் செய்தது இந்த நிகழ்ச்சி. நம்பிக்குச் சூடு வருமாறு நாகம்மை பற்றிச் சொல்லிப் பார்த்தார். நம்பிக்கு சிறிய அசைவும் இல்லை. சிறிது அசைந்து கொடுத்தாலும் அங்கு குடியிருக்க முடியாது. இன்னும் என்ன, சிறிது முணுமுணுக்கத் தொடங்கினாலும் உனக்கு நான் மனைவி இல்லை” என்று கூறவும் தவறமாட்டாள் நாகம்மை என்பதை நம்பி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். பிறகும் அவனால் மாட்டிக் கொள்ள முடியுமா?

நாகம்மை கொண்டு வந்த சொத்துகள் கரைந்தன. கையிருப்புப் போனவுடன் கழுத்தில் கிடந்தவையும் கடையை