திருக்குறள் கதைகள்
101
எட்டிப் பார்த்தன. எவ்வளவு நாட்களுக்குத் தான் தாய் வீட்டி லிருந்து வண்டிச் சரக்குகள் வந்து கொண்டிருக்கும்? செல்வத்தை வளர்த்துக் கொண்டு, மேலும் மேலும் முன்னேறிக் கொண்டு நல்ல குடித்தனமாக நடத்திக் கொண்டு இருந்தால் உதவி தொடர்ந்து கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். நாகம்மை தான் பெயருக்குச் சரியான குணம் உடையவளாக இருந்தாளே! பெற்ற வர்கள் வண்டி வண்டியாக அனுப்பி வைக்கவில்லை என்றவுடன் அவள் தந்த வசைமாரிக்கு அளவில்லை; வண்டி வண்டியாக அனுப்பிக் கொண்டிருந்தாள் என்று சொல்லலாம். அவர்களும் விடுவார்களா? இவளைப் பெற்றெடுத்தவர்களல்லவா?
பதிலுக்குப் பதில் ஏச்சுத்தான்; பேச்சுத்தான்.
எந்தவொரு வேலைக்காரனும், வேலைக்காரியும் நாகம்மை வீட்டில் ஒருவார அளவுக்குமேல் இருக்க முடியவில்லை. துட்டு இருக்கும்போதே எரிந்து விழுவதை இயல்பாகக் கொண்ட அவள் துட்டும் போனபின் எப்படி இருப்பாள். யார் தான் அவள் அதிகாரத்திற்குப் பயந்து பணிந்து வாலாட்டிக் காண்டிருப்பார்கள். ‘எப்படியும் தொலைகிறாள், அவள் இயல்பு அது' என்று இருந்தவர்களும் மாதாமாதாம் சம்பளம் வரவில்லை, வரவழியும் இல்லை என்று அறிந்தபின் சொல்லிக் கொள்ளாமல் கூட வரவேண்டிய சம்பள அளவுக்குமேல் துணிமணி பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு போய்விட்டனர். இந்த நிகழ்ச்சிகள் நாகம்மைக்குப் பேயறைந்தால் போல் இருந்தன.
வேலைக்காரர்கள் எவரும் இல்லாதபடியால் வீடு சுற்றுப் புறங்களெல்லாம் ஒரே அலங்கோலமாகிக் கிடந்தன. வீட்டைக் 'குப்பைத் தொட்டி என்று சொன்னால் எல்லா வழிகளிலும் பொருந்தக் கூடியதுதான். “என்ன இது? பெண்ணொருத்தி இருக்கும் வீடா இது? வேலையாள் இல்லாவிட்டாலும், தன்னால் முடிந்த மட்டுமாவது துப்புரவு செய்து இருக்கக் கூடாதா? இது என்ன நாகரிகமோ?" என்று முணுமுணுத்தார் சிவசாமி. பொறுமைக்காரர் - அதிலும் பேர் பெற்ற மருமகள் என்று வந்தவர் போனவர்களிடமெல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த அவர் தம் வாயால் எப்படிப் பழிப்பது? வராதது வந்துவிட்டால் அடக்கிக் கொண்டு வாழ்வது தான் அழகு என்று இருந்தார். அவரையும் கொதிக்கக் கொதிக்க வைத்தது நாகம்மை செயல்கள்.
66
இரப்புச் சாப்பாட்டிலே இருந்துகொண்டு இடித்துக் கூறுவது வேறா? இந்த வீட்டைப் பெருக்கி மெழுகிக் காலம்