102
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
தள்ள வேண்டும் என்பது என் தலைவிதி இல்லை. இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லையானால் மரியாதையுடன் வெளியேறிக் கொள்ள வேண்டியதுதான். இதற்கென்ன பேச்சு வேண்டியது இருக்கிறது” என்று பொரிந்து தள்ளினாள். இதன் விளைவு என்ன? சிவசாமி வீட்டை விட்டு வெளியேறினார்.
நம்பிக்கு, அப்பா வீட்டை விட்டுச் செல்வது வேதனையாக இருந்தது. ஆனால் அவரை வீட்டில் இருக்கச் சொல்லவும் முடியவில்லை. வெளியேறுவதைக் கல்லாக இருந்து பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை.
“இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்”
என்பது பொய்யா மொழி அல்லவா!
சிவசாமியின் நிலைமையை நாள்தோறும் கேட்டு அறிந்து கொண்டுதான் இருந்தான் தம்பி. நாகம்மையினிடம் அவரும் தன் தாய் கண்ணம்மையும் சிக்கிச் சீரழிவதை நன்றாக அறிந்திருந்தான். செந்தாமரையும் அறிந்திருந்தாள். ஆனால் ஏதாவது பேசி ஏச்சு வாங்கிக் கொள்ளக்கூடாதே என்று பயந்துபோய்ப் பேசாமல் இருந்தனர். இருந்தாலும் சிவசாமி வீட்டை விட்டு வெளியேறிய பின்னும் தம்பியால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முகத்தில் விழிக்காதே என்று கூறிவிட்ட அவர் முகத்தில் விழிப்பது எப்படி? அவர் பிடிவாதக்காரர் ஆயிற்றே என்று தனக்குள் நொந்து கொண்டான். எனினும் வழக்கம்போல் கணக்கெழுதும் கடைக்குச் சென்றான். காலை பத்து மணி முதல் இரவு பத்துமணி வரைக்கும் கணக்கு எழுதினால்தான் மாதச் சம்பளம் ரூபா ஐம்பது.
தம்பி கடைக்குப் போன பின்பு, செந்தாமரை சிவசாமி இருக்கும் இடத்திற்குச் சென்றாள். தன் வீட்டிற்கு வருமாறு மன்றாடினாள். தலையை நிமிர்த்துப் பாராமலே பேசினார்: “வைராக்கியம் தான் பெரிதே ஒழிய வயிற்றுப்பாடு பெரிதில்லை. நீ போ! நான் வரப்போவது இல்லை.
"உங்கள் மகனோ, நானோ தவறு செய்துவிட்டோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற பெரியவர்கள் எங்களை மன்னிப்பதுதானே பெருமை. 'நான் என் தாய் தந்தைக்குச் செய்யவேண்டியதை செய்யக் கொடுத்து வைக்காத பாவி' என்று உங்கள் மகன் சொல்லிச் சொல்லி