உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

103

வருந்துவதை நீங்கள் அறிந்தால் இப்படி மறுக்கமாட்டீர்கள். என்னை வேண்டியாவது நீங்கள் வீட்டுக்கு வரவேண்டும். உங்களை அழைத்துக் கொள்ளாமல் நான் போகப்போவது இல்லை. உங்கள் கால்களில் வீழ்ந்து கேட்கிறேன்; எங்களை மன்னிக்கக் கூடாதா?” என்று கீழே வீழ்ந்தாள். அதற்கு மேலும் சிவசாமியால் மறுக்க முடியவில்லை. செந்தாமரையின் பின் நடந்தார்.

வீட்டுக்குள் போனார் சிவசாமி. வாயிலைக் கடந்ததும் இரண்டு பெரிய படங்களைக் கண்டார். அவை ஓர் உயர்ந்த ஓவியனிடம் சொல்லி எழுதப் பெற்றவை. அந்த மண் வீட்டுக்குத் தனியழகைத் தந்து கொண்டிருந்தன. சிவசாமி கண்ணம்மை படங்கள்தாம் அவை. அவற்றைக் காணச் சிவசாமியின் கண்களில் நீர் மல்கியது. ஆடாமல் அசையாமல் கட்டிலில் உட்கார்ந்தார். படங்களின் கீழே எழுதியிருந்த,

“தடித்தவோர் மகனைத் தந்தையீண்டு அடித்தால் தாயுடன் அணைப்பள் தாயடித்தால் பிடித்தொரு தந்தையணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித் திருமேனி அம்பலத்தாடும், புனிதநீ ஆதலால் என்னை

அடித்ததுபோதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா இனி ஆற்றேன்"

என்னும் இராமலிங்க அடிகள் பாட்டு நெஞ்சை நைந்து உருகச் செய்தது. தம்பித் துரையின் உள்ளன்பைக் காட்ட வேறென்ன வேண்டும். "நாள்தோறும் உள்ளம் உருகி இப்பாடலைப் பாடாமல் அவர் உண்ணுவது இல்லை” என்றாள் செந்தாமரை. ஏங்கி அழுதார் சிவசாமி. தேற்றிக் கூறினாள் செந்தாமரை.

ன்

6

வீட்டுத் தலைவாயில் அருகே தண்ணீர்ச் செம்பு இருந்தது மிகத் தளர்வுடன் வந்த தம்பித்துரை வெளித் திண்ணையில் சோர்வுடன் உட்கார்ந்தான். இடைவேளைச் சாப்பாட்டு நேரம் அது. “கைகாலைக் கழுவுங்கள்; சாப்பிட்டுவிட்டு உட்காரலாம்” என்றாள் செந்தாமரை.

66

"நோய்ப் படுக்கையுடன், பேய்ப் படுத்துதலுக்கும் ஆட்பட்டுக் கிடக்கிறாள் தாய்; பேய்த் துயருக்கு ஆற்றாமல் வீட்டைவிட்டு வெளியேறிப் போய்விட்டார் தந்தை. இங்கே