உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

வாயையும் வயிற்றையும் நிரப்பிக் கொண்டே இருக்கின்றோம். எந்தப் பாவத்திற்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் இந்தப் பாவத்தினை அள்ளிக் கட்டிக் கொள்ளாமல் முடியவே முடியாது.” என்று கொந்தளிப்புடன் பேசினான்.

மெதுவாக வந்து அவன் காதருகே “இப்பொழுது நீங்கள் உங்கள் அப்பாவுடன்தான் சாப்பிடப்போகிறீர்கள்” என்றாள் செந்தாமரை. “என்ன விளையாடுகிறாயா? அவராவது, இங்கு வருவதாவது; இந்தப் பிறவியில் நடக்கப் போவது இல்லை என்றான். சிவசாமி இதனைக் கேட்டுக் கதறிவிடுவார் போல் இருந்தது. ஆனால் துண்டைப் போட்டு வாயை அடைத்துக் கொண்டார்.

66

வரமாட்

உங்கள் அப்பா உள்ளே இருக்கிறார்; டேன் என்றார். என்றாலும் பெரியவர் பெரியவர்தான்; உள்ளே படுத்திருக்கிறார்” என்றாள் செந்தாமரை.

66

“அப்பா வந்திருக்கிறாரா?” என்று ஆவலுடன் உள்ளே ஓடினான் தம்பி. சிவசாமியால் பேசமுடியவில்லை. தம்பியைத் தழுவிக் கொண்டார். பிரிந்தவர் கூடினர் - பேச வேண்டுமா மகிழ்ச்சியை?

செந்தாமரை சிவசாமியை வற்புறுத்தினாள், மாமியை இங்கே வருமாறு சொல்லியனுப்புங்கள் என்று. தம்பிதுரையும் ஒத்துப் பேசினான். கண்ணம்மையும் இப்பொழுது தம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அரை வயிற்றுச் சோறாக இருந்தாலும், கூழாக இருந்தாலும் கூடியிருந்து உண்பது கொள்ளையின்பம் அல்லவா!

ஐம்பது ரூபாதான் தம்பியின் சம்பளம். இரண்டு பேருக்கு நான்கு பேர்கள் ஆகிவிட்டார்கள் குடும்பத்தில், எத்தனை பேர்கள் ஆனால் தான் என்ன? செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய முறையோடும் செயலாற்றும் பண்பு இருந்தால் எதுதான் முடியாது? அது அந்த செயலாற்றும் பண்பு இருந்தால் தூணும் துரும்பு ஆகும்; மலையும் மடுவாகும்.

புன்முறுவலும் பூத்த முகமும் இனிய சொல்லும் எளிமையும் தூய்மையும் செல்வங்களாகக் கொண்டிருந்த செந்தாமரையைப் பொருட் செல்வம் இல்லாமை துன்புறுத்தி விடவில்லை. வருவாயைக் கொண்டு பிறர் வியக்குமாறு குடும்பத்தைக் காத்து வந்தாள். "வருவாய்க்கு ஏற்பச் செலவு செய்பவளே வாழ்க்கைத் துணை என்பதற்குச் செந்தாமரை