திருக்குறள் கதைகள்
123
தெளிவாக்க விரும்பினார். அலுவலகத் தலைமை எழுத்தர் வந்தவுடன் அவரை அனுப்பிக் கணக்கு எடுத்து வருமாறு பணித்தார். அவர் கணித்து வந்த கணக்கும் இளைஞர் குறித் திருந்த கணக்கும் சரியாக இருந்தமையைக் கண்ட தாசில்தார் “காலம் நீடிக்காது இப்பையன் முன்னேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும்” என்று முடிவு கொண்டார்.
66
ஆரம்பப் படிப்புடன் இருந்த இளைஞர் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றார். முதல் மாணவராகவே எல்லா வகுப்புகளும் தேறினார். மாநிலம் முழுவதற்கும் ஏற்படுத்தியிருந்த கட்டுரைப் போட்டி ஒன்றிலே முதன்மை யாக வெற்றியடைந்து “ஐந்நூறு ரூபா' பரிசு பெற்றார். இவர் படித்து வந்த பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், மேல் அதிகாரிகளும் பெரிதும் பாராட்டிச் சிறப்பித்தனர்.
இளைஞர் முதலில் மாகாணக் கல்லூரியில் ஓர் ஆசிரியராகச் சென்றார்; விரைவில் கல்வி அதிகாரியானார். பின் வழக்கறிஞர் களுக்கென இருந்த தேர்வில் முதல்வராக வெற்றியடைந்தார். அதனால் மாவட்ட முன்சீப், துணை கலெக்டர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்னும் உயர் பதவிகளைச் சிறப்புடன் நிர்வகித்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த முதல் இந்தியர் நம் இளைஞரே என்றால் நம் இளைஞரின் சிறப்புத்தான் என்னே! ஒரு ரூபாய் எழுத்து வேலை பார்த்த இளைஞர், இடையறாத முயற்சியால் உயர் நீதிமன்ற நீதிபதியாக வருவது எளிய காரியமா? எல்லோர் வாழ்விலும் நடக்கக் கூடியதா? கொழுந்து விட்டெரியும் முயற்சி நம் இளைஞரிடம் இருந்தது. அது வறுமை. பிணி, எதிர்ப்பு ஆகிய இருட் படலங்களை இருந்த இடம் தெரியாமல் ஓட்டியது. இல்லையேல் உயர்நீதிமன்றத்தின் முகப்பில் இவ்விளைஞருக்கு 'பளிங்குச் சிலை' நிறுத்தி வைப்பார்களா?
ஓஓ! இளைஞர் பெயரைச் சொல்ல வில்லையோ? அவர் தாம் வீட்டிலே விளக்கு வெளிச்சம் இல்லாது தெரு விளக்கிலே படித்து முயற்சியால் முன்னுக்கு வந்த சர்.தி. முத்துசாமி ஐயர்! கடல் தந்த முத்தா இளைஞர் முத்து? கடல் தரா முத்து அல்லவா!
ஆமாம்; மறந்து விட்டோமே, முத்துசாமியைக் கடல் தரா முத்து ஆக்கிய தாசில்தார். பெயர் என்ன? நன்றி மறக்கலாமா? அவரும் உண்டு? அவர் பெயர் முத்து சபாநாயகர்! வாழ்க கடல் தரா முத்துகள் என்று வாழ்த்த தோன்றவில்லை “முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி வரும்