உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. இரண்டு கடிதங்கள்

அன்பும் அறச் சிந்தையும் உடைய ஐயா, தாங்கள் காலத்தால் செய்த உதவியால் இதுவரை உயிர் வைத்திருக்கும் யான், என் உள்ளங் கனிந்த நன்றியறிதலுடன் எழுதும் கடிதங்கள் வை. இவையே முதற்கடிதங்கள்; இறுதிக் கடிதங்களும் இவையே.

வை.

"யான் யார்? என் வரலாறு என்ன?” என்பன போன்ற செய்திகள் தங்கள் நினைவில் இருக்க முடியாது; இருக்கக் காரணமும் இல்லை. என்னைப் பற்றி நானே தங்களுக்கு நினைவுபடுத்தினால் கூட நினைவுக்கு வருவது அரிதுதான். ஏனெனில் காலங் கடந்துபோன செய்தி அது.

ம்

என்னை நினைவுபடுத்திக் கொள்ளுமாறான அருமை பெருமைகள் எதுவும் என்னிடம் இல்லை என்பதை யான் அறிவேன். எனினும் தங்களிடம் அரிய உதவிகளை வேண்டி நிற்கும் இவ்வேளையில் வ்வேளையில் ஏதேனும் தொடர்பு காட்டி ஆக வேண்டுமே என்னும் அவசியத்தால் குறிப்பிட நேர்கின்றது. எனக்கு என்னென்ன பேறுகள் இல்லையாயினும் சரி - தங்களை நெஞ்சத்தே நிறுத்திக் கொண்டு இறுதி மூச்சையும் விடக்கூடிய பேறு எனக்குண்டு என்று பெருமைப்படுகின்றேன்.

ப்பொழுது பதினைந்து ஆண்டுகள் நகர்ந்துவிட்டன. எனக்கு ஏற்ற அளவிலே ஓரிடத்தில் பெண்பார்த்துத் திருமணம் செய்து கொண்டேன்.பெண் வீட்டாரைப் பற்றி என்ன சொல்வது? ஐம்பது நூறுக்குக்கூட வழியில்லாத நான், அவர்களை நினைக்கும்போது பணக்காரன்! அவர்களுக்கோ எனக்கோ பணம் இல்லாமை ஒரு குறையாகப் போய்விடவில்லை. அவர்களுக்குக் குழந்தை என்னும் பெயரால், எனக்கு மனைவி என்னும் பெயரால் வாய்த்தாள் நிறைமதி. அவளை எங்கள் சல்வம் என்று சொல்லிக் கொள்வதிலே இப்பொழுதும் என்னை அறியாமலே ஒரு பெருமை, உண்டாகாமல் இல்லை.

-

ரு

எனக்கும் நிறைமதிக்கும் திருமணமாகி, எங்கள் வீட்டுக்கு அவளை அழைத்துக்கொண்டு புறப்பட இருக்கின்றேன். அப் பொழுது என்னை அறியாமலே எனக்கு ஓர் அச்சம் இருந்தது.