132
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
விழிப்பாக இருந்தேன். இல்லையேல் சூறைக் காற்றிலே துரும்பாகச் சுழலத்தானே வேண்டும். இதற்கு ஐயம் உண்டா?
.
-
-
பகல் பொழுதிலே என் உறுதிக்குச் சிறிதும் அசைவு ஏற்படுவது இல்லை. இரவுப் பொழுதிலே தனிமையாக முடங்கிக் கிடக்கும் இரவுப் பொழுதிலே நெஞ்சக் குமுறல் அடக்குவார் அற்று உயரவே கண்டேன். தலையணையிலே முகத்தை அழுத்திக் கொண்டு திணறுவேன். என்னை அறியாமல் கண்னை மூடினால் அந்த நொடியில் என் கனவில் நிற்பது நிறைமதிதான். பின்னும் உறங்க முடியுமா? இரவென்று ஓர் பொழுதே இல்லாமல் பகலாகவே இருக்கக் கூடாதா என்று எத்தனை பொழுதுகள் ஏங்கியிருப்பேன்! ஆனால் “பகலென்று ஒரு பொழுதே இல்லாமல் இருக்கக்கூடாதா என்று எண்ணிய நாளும் உண்டே” என்றும், என் எண்ணத்திற்கு நானே தடை போட்டுக் கொள்வேன். எல்லாம் நிறைமதி இருந்ததும் ல்லாமையும்தான் காரணங்கள்! உணர்ச்சி உள்ள நேரத்தே அறிவு பெரும்பாலும் உறங்கி விடத்தானே செய்கின்றது, இதற்கு மேலுமா அறிவோடு நினைக்க முடியும்?
என்னை எப்படி எப்படியோ அடக்கி வைத்தேன். பயன் இல்லை. இயற்கை என்னை ஒடுக்கிவிட்டது. நிறைமதியின் கவலை என்னை அணு அணுவாகத் தின்னத் தொடங்கிற்று. குருதி, தசை, எலும்பு, நரம்பு நாடி -எல்லாம் குறைக்க உருக்க ஆரம்பித்து விட்டது. ஆம்! எனக்கு எலும்புருக்கி நோய் வந்து விட்டது. அற்ப வாழ்வுடைய மாந்தன் இயற்கையுணர்வை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி காண இயலுமா? தோற்றேன் அம்மவோ தோற்றேன்.
ய
என்
என் ஒருவனைப் பொறுத்த அளவில் நான் இருந்திருப்பேன் கவலையில்லை. “சாவே ஆனால் சாவே வா; விரைந்துவா; நிறைமதி போன வழியிலே என்னையும் கூட்டிச் செல்” என்று என் நெடுங்கரங்களை நீட்டியிருப்பேன். ஆனால் நான் மட்டுமா இருக்கின்றேன்? என் வீட்டில் என்னையே நம்பியிருக்கும், ஓர் அன்புப் பிழம்புமல்லவா இருக்கின்றாள். என் வாழ்வில் மின்வெட்டுப்போல் ஒளியும் சிலவேளைகளில் உண்டென்றால் அதற்கு அந்த ஒளி விளக்குத்தானே காரணம். அவள் வாழ வேண்டும் என்பதற்காகவே இதுவரை வாழ்ந்தேன். இன்னும் வாழ முடியுமா என்றும் நினைத்தேன். ஆனால் என் நோய் இனியும் என்னை வாழவிடாது. எல்லைக்கோடு என்னவோ அது வரைக்கும் என்னை இழுத்துக் கொண்டு போகிவிட்டது.