உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

133

முடிவினை எதிர்பார்த்து அமைந்து கிடப்பது அன்றி வேறொன்றும் என்னால் கூடுவது இல்லை. இந்நிலைமையில் தான் தங்களுக்குக் கடிதம் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. உங்கள் உதவியைப் பெறுவதற்கு என்றே பிறந்த நான் என்னால் இயன்ற மட்டும் தங்களுக்கு அல்லல் தராது இருப்பேனா? இறப்பேனா?

முன்னமே என் சொத்தினை இரு கூறுகளாகப் பிரித்து,

ரு கூறினை ஆறுமுகம் அறச் சாலைக்கு எழுதிவைத்து விட்டேன். அதன் பொறுப்பாளராகத் தங்களைக் குறித்து இப்பொழுது ‘இறுதி முரி'யும் (உயில்) எழுதியுள்ளேன். தங்கள் மீது பாரமேற்றும் இச்செயலைத் தங்கள் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் செய்திருக்க வேண்டும். உண்மை! ஆனால் தங்களைப் பற்றி எனக்குள்ள அன்புப் பிணைப்பாலும், தங்களையன்றி இப் பொறுப்பிற்குத் தக்க வேறொருவர் இல்லை என்று என் இதயம் வற்புறுத்தியதாலும் இம்முடிவினை நான் செய்தேன். என் நிலைமையை நோக்கினால் இவ்வேளையில் இம்முடிவினை அன்றி வேறெதுவும் செய்ய முடியாது என் பதைத் தாங்களும் உணர்வீர்கள். மாறாகத் தோன்றினால் மன்னித்துதவ வேண்டுகின்றேன். எப்படியும்,

66

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.'

என்னும் நன்னெறிப்படி செய்தேன் என்று அமைதியாக மூச்சு டுவேன். அதுபோதும்.

இந்தக் கடிதத்துடன் மற்றொரு கடிதமும் இருக்கும். அதன் தலைப்பிலே எழுதியுள்ள குறிப்பினைப் படித்துப் பார்த்து, அதன் பின்னர் தங்கள் விருப்பம்போல் செய்ய மன்றாடுகின்றேன். வணக்கம்.

ஆறுமுகம் அறச்சாலை, கடமலைக் குண்டு

தங்கள் உயிரன்பன், செல்லப்பன்

(கடிதத்தைப் படித்து முடித்தபின் பெருமூச்சுவிட்டார் ஆறுமுகம் என்றோ நடந்த ஒரு காரியம் எத்தனையோ ஆண்டுகள் கழித்து நாடகம் நடத்துவதைக் கண்டு சிந்தித்தார். அடுத்த கடிதத்தையும் உடனே படித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனை எடுத்தார். தலைப்பிலே,