உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

அழுதுகொண்டு இருந்த நேரத்தில்தான் எங்கள் கூட்டத்தில் சேர்த்து ஆதரவு தந்தோம். அதன் பயன், அன்று முதல் எங்கள் கூட்டமே அழுகின்றது. என்றுதான் எங்களை ள விட்டுத் தொலையுமோ?" என்றான். அவன் பேச்சிலே துடிப்பு மிக இருந்தது. ஆனால் வரவர, இறங்கிக்கொண்டு வந்தது. அவன் பேச்சினைக் கேட்டுச் சிக்கலான சிந்தனைக்கு ஆளானேன். கூத்தர் தலைவனான அவனையும், பொம்மியையும் பலமுறை பார்த்துப் பார்த்துச் சிந்தித்தேன். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன். அவனுடன் பேசினேன்.

“என்னப்பா, இவள் இருப்பதால்தானே உனக்குத் தொல்லை; வளை என்னிடம் கொடுத்து விடு; நான் காப்பாற்றிக் கொள்கிறேன். நன்றாக நினைத்துப் பார்த்துச் சொல். வேறு எவரிடமும் கேட்க வேண்டுமானாலும் கேட்டுச் சொல்' என்றேன். அவனோ, “ஏன் சாமி, எங்களிடமே வழிக்கு வராத இவள் உங்களிடம் சரிக்கு வந்துவிடுவாளா? ஏன் தொல்லைப் படுகிறீர்கள்" என்று கூறி பாவம் ளக்க மனம் போல் இருக்கிறது!” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

66

“எனக்கு ஒன்றும் தொல்லையில்லை. நீ விரும்பினால் என்னிடம் இவளை ஒப்படைத்து விடு” என்று கூறினேன். பொம்மியைப் பார்த்து, “பொம்மி என்னுடன் வர உனக்குச் சம்மதமா?” என்றேன். அவள் வாயால் பதில் சொல்லவில்லை. அந்தக் கூட்டத்தை விட்டுப் போனால் போதும்போல் இருந்திருக்கிறது. ‘ஆகட்டும்' என்று முகத்தை அசைத்துக் காட்டினாள்.

L

"சரி சாமி, இந்தப் பிள்ளை எங்களிடம் ஐம்பத்தேழு மாதம் இருந்திருக்கிறது. நாங்கள் தான் தண்டச்சோறு துணி ணி கொடுத்திருக்கிறோம். மாதத்திற்கு ஒரு ரூபாயாவது கொடுத் தால்தான் தேறும்' என்றான். “சரி, வா என்று என்னுடன் அவனையும் பொம்மியையும் அழைத்துக்கொண்டு சென்றேன். அதற்குமுன் அடியுதை தந்தும், ஈவு இரக்கமில்லாது பேசியும் இருந்த கூட்டமாக இருந்தும் பொம்மி அவர்களைப் பிரிய நேர்ந்தபோது கண்ணீர் வடித்தாள். ஒவ்வொருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வந்ததை நினைக்கும்போது "பேயோடு ஆயினும் பிரிவு அரிது என்னும் பழமொழி என்நெஞ்சில் நின்றது.