திருக்குறள் கதைகள்
137
வீட்டுக்குப் போனவுடன் ஒரு நூறு ரூபா நோட்டை அவனிடம் தந்தேன். “என்னிடம் ஏது சாமி மீதம்? நீங்கள் சில்லரை நோட்டாகவே கொடுங்கள் காடுங்கள்" என்றான். என்றான். “எனக்கு ஒன்றும் சில்லரை தரவேண்டாம்; நூறையும் எடுத்துக்கொள் என்றேன். “நூறுமா சாமி” என்று மகிழ்ச்சியால் பலமுறை கும்பிட்டுக் கொண்டே, நோட்டைக் கண்களில் ஒற்றி வேட்டியின் முன்தானையிலே முடிந்து இடுப்போடு செருகிக் கொண்டான். “பொம்மி! சுகமாக இரும் “மா” நான் என்னவோ சில வேளைகளிலே கண்டித்திருப்பேன்; அடித்திருப்பேன்; எல்லாம் வயிற்றுப் பாட்டால் தான்’மா! இரக்கமில்லாமல் ஏசிப்பேசி இருந்தாலும் அதை எல்லாம் மனத்தில் போட்டுக்கொள்ளாதே அம்மா! ஐயா மனம் கோணாமல் நடந்து நல்லா இரும்மா என்றான். "வரத்துப் பிள்ளையாக இருந்தாலும் பிரிவதற்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை சாமி, வருகிறேன்” என்று கண்ணீருடன் பிரிந்தான். அப்பொழுதும் பொம்மி அழுதாள். அன்பு நடத்தக் கூடிய அந்தக் கூத்திலே நான் பங்கு பெறாது இருக்க முடியுமா? நானும் கண்ணீரை என் துண்ட துடைத்துக் கொண்டேன்.
ல்
பொம்மி வந்தவுடன் நான் செய்த முதற் காரியம், அவள் பெயரை மாற்றியதுதான். எப்படி மாற்றினேன்? அழகுக்காகப் பெயர் மாற்றம் செய்யவில்லை. எந்த நன்றியை மறந்தாலும் உய்வுண்டு; ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உய்வே கிடையாது அல்லவா! அதனால் என்னவென் றறியாப் பருவத்திலே, ஊசி மருந்துக்காகக் காலணிகலத்தைத் தந்து என்னை அன்பால் அடிமையாக்கிக்கொண்ட தங்கள் அருமைச் செல்வியின் பெயரைப் பொம்மிக்குச் சூட்டினேன். இன்று பொம்மியைச் ‘செல்வி' என்று அழைக்கும் பொழுதெல்லாம் செல்வியின் திருமுகமும் திருச்செயலும் இன்ப மழலையும் என் கண்முன் நிற்கின்றன. இன்று அவள் தங்கள் இல்லத்தில் இருக்கிறாளோ? அல்லது புத்தகத்தில் இருக்கிறாளோ? அவள் எங்கிருப்பினும் இனிது வாழ்வாளாக! அவள் பெயர் கொண்டமையால் இவளும் வாழ்வாளாக”
ஒன்றும் சொல்லாமல் முகத்தைப் பொத்திக் கொண்டு மங்கலம் அம்மையார் வீட்டுக்குள் சென்றார். சிறிது பொழுது ஆறுமுகத்தாலும் படிக்க இயலவில்லை. செல்லப்பன் வேண்டி யுள்ளது என்ன என்பதை விரைவாகத் தெரிந்து விடத் துடிப்பு இருந்தது. அதனால் ஆறுமுகம் தொடர்ந்து படித்தார்.)