138
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
L
கரடு முரடான வழிகளில் வாழ்ந்து பழகிவிட்ட பொம்மிச் சல்வியை, ளகிய நயமான வழிக்குக் கொண்டுவர ஆரம்பத்தில் சங்கடமாகவே இருந்தது. என்றாலும் அவளி இயற்கையறிவும், பண்பும் இருந்த காரணத்தால் எளிதில் மாற்றியமைக்க முடிந்தது. எழுத்தறிவு பெறுவதற்கும் நான் வழி செய்தேன். ஓரளவு நிம்மதியாகவே வளர்ந்தாள். வீட்டிலே செல்வமாக அவள் வளர்க்கப்பட்டதால் நல்ல பொலிவுடனே வளர்ந்தாள்.
செல்வியைப் பற்றிப் பலரும் புகழ்வது கண்டு மகிழ்ந்தேன். காலத்தால் செய்யப்பட்ட என் செயலையும், செல்வியைப் பேணுகின்ற முறையையும் பலபடியாகப் பலர்பலர் பாராட்டி யதையும் என் காதாரக் கேட்டு மகிழ்ந்தேன். ஊரார் பாராட்டுக்காக நான் இக்காரியத்தில் இறங்காவிட்டாலும்கூட ஊரார் புகழ்ச்சி செல்வியை உயிராகப் போற்றிக் காக்கத் துணைசெய்தது. அவளும் ஒருநாள் மலர்ந்து பூங்கொடி
யானாள்.
66
அதற்குமுன் இல்லாத அளவு, அப்பொழுது எனக்கு மகிழ்ச்சியாயிற்று. ஆனால் அம்மகிழ்ச்சிக் கோடுகள் தோன்றி மறையு முன்னமே கவலைக் கோடுகள் படர்வதையும் மகிழ்ச்சிக் கோடுகள் தோன்றியதைக்கூட மறைத்து விட்டதையும் கண்டேன். செல்வியும் என்னதான் எண்ணிக்கொள்வாளோ? தோ என் முன்னிலையில் மலர்ந்த முகத்துடன் நடித்தாள். நான் வீட்டில் இல்லாத வேளைகளிலும் சரி, வீட்டிலே தனித்து இருந்து ஏதாவது காரியம் செய்யும் போதும் சரி, 'செல்வி' தனித்திருந்து கண்ணீர் வடிப்பதே வழக்கமாகிவிட்டது. “என்ன இருந்தாலும் மற்ற மற்றவர்களைப்போல எனக்கும் தாய் இல்லையே; எவ்வளவு அன்பு உடையவராக இருந்தாலும் தந்தை தந்தைதானே; தாய் ஆகமாட்டாரே” என்னும் சிக்கலான சிந்தைக்கு அவள் ஆட்பட்டிருப்பதைக் குறிப்பாலும் பிறரிடம் அவள் சொல்லிய சொல்லாலும் அறிய முடிந்தது. இவ்வேளையில் ஊர்ப்பெண்கள் வந்து வந்து உள்ளன்புடன் சொல்லுவதாகச் சொல்லும் சொற்கள் பெருந் தொல்லை தந்தன. எனக்கும் செல்விக்கும் உள்ள அன்பில் சற்றும் மாற்றமில்லாமல் வளர்ந்துகொண்டு வந்தாலும் கூட, ஏதோ வொரு பெருத்த இடைவெளி ஏற்பட்டுக் கொண்டு வருவது தெளிவாயிற்று.