உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

139

என் முன்னால் நிற்பதையும், மலர்ந்த முகத்துடன் பார்த்துப் பேசுவதையும், 'கலகல'வென்று களங்கமற்றுச் சிரிப்பதையும் ஏற்று இன்புறும் நிலைமை தொலைந்து போய்விட்டது. எங்கிருந்து கொண்டோ குரல் கொடுப்பாள். 'ஆம்' 'இல்லை' இவ்விரண்டு பதில்களுடன் பேச்சைச் சுருக்கிவிடுவாள். அவளாக வந்து எந்த வொன்றையும் பேசுவது இல்லை. இந்த நிலைமையும் வாழ்வும் என் நெஞ்சைக் குடைந்தது. இது பூங்கொம்புப் பருவம் செய்யும் பொலிவு விளையாட்டு என்பதை நான் உணராது செல்வியைப் பற்றி உள்ளுக்குள்ளாக என்னென்னவோ நினைத்து என்னை வருத்திக்கொண்டேன். காலம் எத்தனை நாடகங்களைத்தான் என் ஒருவன் வாழ்வில் நடத்திக் காட்டுவது?

66

முன்னெல்லாம் பண்ணைக்குப் போன பொழுதுகளில் நான் செல்வியை அழைத்துக் கொண்டு போனது உண்டு வீட்டினுள்ளே அடைபட்டுக் கிடப்பது அவளுக்குப் பிடிப்பது இல்லை. மாலைப் பொழுது வருவதை எதிர்பார்த்திருந்து அவளே புள்ளிமான் போல் துள்ளி வந்துவிடுவாள் தோட்டத் திற்கு. அவள் ஓட்டத்தையும் நடையையும் கண்டு என் நெஞ்சம் படபடக்கும். கால் முழுமையும் தரையில் படிய நடப்பதைக் காணமுடியாது. இளங் கன்று பயம் அறியுமா? ஆனால், அவளோ இப்பொழுது தோட்டத்தைப் பற்றிய நினைவை அறவே விட்டுவிட்டாள். வீட்டைவிட்டு வெளியேறும் நினைவே அவளுக்கு இல்லை. நானும் வலியுறுத்தவும் இல்லை.

என் தோட்டத்திற்கு அடுத்த தோட்டம் பாலப்பன் என்பவருக்குரியது. அவர் பொதுவாக நல்ல மனிதர்; நன்றாகப் பழகும் பண்புடையவர். அவருக்குச் செழியன் என்னும் பெயருடைய மகன் ஒருவன் உண்டு. அந்த மலைக்காட்டிலே மருத்துவக் கல்லூரி அளவுக்குப் படிக்க வைத்த ஒரே ஒருவர் அந்த பாலப்பர்தான் என்றால் அவர் துணிவும், அறிவு வேட்கையும் புலனாகும் என்றே நினைக்கின்றேன். அவர் இயல்புக்குத் தகவே செழியனும் சிறந்தவனாகவும், அறிவாளி யாகவும் விளங்கினான். அவன் விடுமுறையாக ஊருக்கு வந்த பொழுதுகளில் தோட்டத்திற்கு வரவும், வந்து என்னோடு பழகவும் தவறுவது இல்லை. இவ்வேளைகளில் வ்வேளைகளில் செல்வியும் ருப் ாளாயின் எங்கள் உரையாட உரையாடல் இடையே அவள் கலந்துகொள்வதும் உண்டு. எல்லாரும் மகிழ்ச்சியாகப் பேசி ன்புறுவோம்.