140
8
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
ஒருநாள் நான் தோட்டத்தில் இருந்தேன். செழியன் என்னிடம் வந்தான். அதற்கு முன் காணாத அளவு தயக் கத்துடன் பேசினான்: "ஒரு வாரத்திற்கு முன்னாகப் படிப்பு முடிந்துவிட்டது. இனி எங்காவது என் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். தேர்வில் உறுதியாக வெற்றி கிடைக்கும்; தொழிலைத் தொடங்கவேண்டிய இந்த வேளையிலே, திருமணமும் நடத்திவிட வேண்டும் என்று அப்பா அம்மா சொல்கிறார்கள் என்று எங்கேயோ பார்த்துக்கொண்டு பேசினான். “நல்லது தம்பி; அப்படித்தான் செய்யவேண்டும். எந்த எந்தக் காலத்தில் எந்த எந்தக் காரியத்தைச் செய்யவேண்டுமோ அந்த அந்தக் காலத்தில் அந்த அந்தக் காரியத்தைச் செய்துவிடுவது தான் நல்லது. இதனைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி யடைகின்றேன். அப்படியே செய்ய வேண்டியதுதான்” என்றேன்.
6
6
செழியன் சொன்னான் : “என் தந்தையாரைப் பற்றி நான் சால்ல வேண்டியது இல்லை. நீங்களே அறிவீர்கள். என் விருப்பத்திற்கு அவர் தடையாக இருக்கமாட்டார். ஆலந் தளியிலே முதல் முதல் படித்த பெண் எங்கள் அம்மாதான். அவரும் ஆரம்பத்தில் ‘ஆயா'வாகத் தொண்டு செய்திருக்கிறார். ன்றும் உள்ளூர் மருத்துவர் அவர்தான். அவர் விருப்பத்தாலும் தூண்டுதலாலும் தான் நான் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடிந்தது. அவருக்கு நான் என்றால் உயிர்.”
"நல்ல குடும்பம்; இப்படித்தான் ஒரு குடும்பம் இருக்க வேண்டும். வேறு என்னதான் கடைசியில் அள்ளிக் கட்டிக் கொண்டு போகப் போகிறோம்” என்றேன் நான்.
த்
“எனக்கு ஓர் எண்ணம் இருக்கிறது. அது இரண்டு ஆண்டு களுக்கு முன் இத் தோட்டத்தில்தான் ஏற்பட்டது. தாங்கள் ஒத்துக்கொள்வதாயின் தங்கள் செல்வியைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது என் கருத்து. எனக்குச் செல்வியை மணந்துகொள்வதில் முழு நிறைவு இருக்கிறது. தாங்கள் அனுமதிப்பதாயின் உடனே பெற்றோர்களிடம் சொல்லி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிடலாம். இதனால் அவர்கள் திட்டம் நிறைவேறுவதுடன், என் ஆவலும் நிறைவேறும்” என்று செழியன் நிறுத்தினான்.
படித்த நாகரிகம் வாய்ந்த வாலிபன் அல்லவா செழியன். தொடக்கத்தில் தயக்கத்தோடு பேசினாலும் அவன் குரலில் தெளிவு இருந்தது. எனக்குள் அவனைப் பாராட்டினேன். "இதைப் பார்க்கிலும் நான் கேட்க வேண்டிய நல்ல செய்தியும்
66