திருக்குறள் கதைகள்
145
காண்டேன். அது என் என் தளிவில்லாமை ஒன்றால்தான் என்பதை இப்பொழுதே பொழுதே உணர்கின்றேன். உணர்கின்றேன். உணரவும் இப் பொழுதுதான் முடிந்தது. என் வாழ்வில் நடந்தவை அனைத்தும் நன்மையானவையே. இயற்கை நடத்தும் எதுவும் தவறானதாக இருக்கமுடியாது. அதனை எதிர்க்கவோ மாற்றவோ நினைத்து மனிதன் வாடுவது தான் அறியாமையாகத் தோன்றுகின்றது.
நிறைமதியை என் முன்னே நிறுத்தியது இயற்கை, எளிமை வாழ்விலே அன்பும் இன்பமும் அனுபவிக்க இயலும் என்பதைத் தெள்ளிதின் எடுத்துக் காட்டியது. அதே நிறைமதியைப் பறித்தும் கொண்டது. அவ்வாறு ஆகியிருக்கா விட்டால் ஒருவேளை - அவளோடு என் இல் வாழ்க்கையைச் செவ்வையாக நடத்தி யிருப்பேன். எனக்காகவும் அவளுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவுமே வாழ்ந்துவிட்டிருப்பேன். அதனை மாற்றிச் சற்று விரிந்த பார்வையை அடையச் செய்ய வேண்டியது அவசியமாயிற்று. அதற்காகவே, மயங்கி விழுந்து தங்கள் முற்றத்திலே கிடக்கவும், தங்கள் அன்பிலே எழும்பவும் ஏற் பட்டது. அதன் பயன் முயற்சியாளனாகிப் பொருள் தேடவும், அதனை நன்முறையில் பயன் படுத்தவும் நேரிட்டது. எல்லாவூரும் எம்மூர்; எல்லாரும் நம்மவர் என்னும் உயரிய எண்ணமும் வலுத்தது. இதற்கோர் முத்திரையாக அமைந்தது கழைக்கூத்து பொம்மி என்னிடம் வளர்ந்தாள். என்னிடம் அவள் வளர வேண்டிய கால எல்லை முடிந்தது. வேறொருவர் அன்பும் அர வணைப்பும் அவளுக்குத் தேவை. அதற்கு நான் இருப்பது தடையாக இருக்கிறது. அத்தடை இனி நீக்கப்பட்டுத் தான் தீரவேண்டும். இயற்கை நியதி அது. அவளுக்குரிய இடத்தைக் கண்டடையும் வரை இடைத் தாங்குதல் வேண்டும் அல்லவா! அவ்வாறு தாங்குபவர் யார்? அதற்காகவே தாங்கள் பொறுப் பேற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்தப்படுகின்றீர்கள்.
இன்னும் என்ன சொல்வது? உடனடியாக நீங்கள் இங்கு வரவேண்டும். வரும்வரை இருப்பேனோ? இருக்க மாட்டேனோ? என் கையில் அது இல்லை. யான் இருந்தாலும் சரி, இல்லை யானாலும் சரி. இக்கடிதத்துடன் நான் செல்விக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்து விட்டேன். இனி என்னால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை. தாயும் நீங்களே; தந்தையும் நீங்களே; எல்லாமும் நீங்களே, நான் என் இதய முழுமையையும் ஒன்று கூட்டி உங்களைத் தவிர்த்து யாரும் எதுவும் செல்விக்கு இல்லை என்று உறுதி மொழிகின்றேன்.
-