திருக்குறள் கதைகள்
147
என்று கண்ணைத் திறந்து பார்த்தான் செல்லப்பன். அடுத்த நொடியில் அவன் கண்கள் தாமாகவே மூடிக் கொண்டன. ஆம்! நல்லவனுக்காகக் கண்ணீர் வடிக்க வேண்டிய நாட்களுள் ஒன்றாயிற்று அந்நாள்.
(செய்ந்நன்றி மறவாச் செல்லப்பனை நினைக்கும் பொழுது ஒன்றிரண்டு குறள்களா நினைவுக்கு வருகின்றன? செய்ந்நன்றி அறிதல் அதிகாரக் குறள்களில் பெரும்பாலும் நினைவில் நிற்கின்றன)
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
101
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
102
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
103
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
104
உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
105
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
106
எழுமையும் எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு
107
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றறே மறப்பது நன்று
108
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
110