150
இளங்குமரனார் தமிழ்வளம் - 8
மீதம் வைத்துச் சின்னதுகளைப் படிக்க வைக்க முடிகின்றது. இன்னும் இரண்டொரு வருடத்துப்பாடு. பிறகு இந்தத் தொழிலுக்கு நானும் ஒருவேளை முழுக்குப் போட்டாலும் போட்டு விடலாம்" என்று புதிதாக வண்டி இழுக்க வந்த இருளாண்டியினிடம், உயினிடம், பழக்கப்பட்ட வண்டிக்காரன் தலைமலை
சொன்னான்.
"நீ முயற்சியாளன்; மனிதனாகப் பிறந்தால் இவ்வள வாவது வைராக்கியம் வேண்டும். நீ ஒருவன் எவ்வளவோ ா காரியங்களைச் சாதித்திருக்கிறாய். முயற்சியாளி, முயற்சியாளி என்று எவரெவரையோ உதாரணத்திற்குப் பேசுகிறார்கள். உன்னை எடுத்துக் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சாதாரணமான கட்டை வண்டிக்காரன் தானே நீ! உன் முயற்சியை உயர்வாக எத்தனை பேர் நினைப்பார்கள்” என்று உள்ளத்தைத் திறந்து இருளாண்டி பேசினான்.
தலைமலை சிரித்தான். சிரித்தான். “தம்பி, என்னவோ பெரிய முயற்சியாளன் என்று என்னைச் சொல்கிறாயே; நீ பைத்தியக் காரன்! புதியவன்தானே! நம் வண்டிப்பேட்டை முதலாளி இருக்கிறாரே - மணிக்காளை அவரைப் பற்றித் தெரியுமா? தெரிந்திருந்தால் என்னை இவ்வளவு பெரிது பண்ணிப் பேசியிருக்கமாட்டாய்!”
66
-
அண்ணே, இப்பொழுது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நம் முதலாளியினிடம் அழைத்துக் கொண்டுபோய் இவன் புதியவன்; நல்லவன்; வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்; இவனைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று என்னை வேலையில் சேர்த்துவிட்டாய் அல்லவா! அன்று முதலாளி உட்கார்ந்திருந்த
டத்தில் அவர் தலைக்கு மேலே சுவரில் இரண்டு படங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று கட்டை வண்டிப் படம். என்னால் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. நம் முதலாளியைப் போல் முகவாக்குள்ள ஒருவர் -ஆனால் நல்ல வாலிபர் - வண்டி இழுத்துப் போவதுபோல் இருந்தது. அது பற்றி உன்னிடம் கேட்க நினைத்தேன். மறந்து போனேன்.”
66
அதைத்தான் நானும் சொல்லப்போகிறேன். நீயும் சரியான சமயத்தில் நினைவுக்கு கொண்டு வந்தாய். வண்டியை நம் முதலாளியைப் போல் முகவாக்குடைய ஒருவர் இழுக்க வில்லை; நம் முதலாளியேதான்! அப்படி வண்டியிழுத்துப் பிழைத்தவர்தான் இவ்வளவுக்கு முன்னேறியிருக்கிறார்.