திருக்குறள் கதைகள்
151
இருளாண்டி வண்டி இழுப்பதை மறந்துவிட்டான். எளிதில் நம்பமுடியாத செய்தியாக இருந்தது அவனுக்கு! “என்ன இருளாண்டி, பேச்சம் நடக்கவேண்டும்; காரியமும் நடக்க வேண்டும். நின்றால் கட்டி வருமா? நீ இதை இவ்வளவு பொருட்டாக எண்ணுகிறாய். இதற்கே இவ்வளவு ஆச்சரியப் படும் நீ, துன்பமோ இன்பமோ எதிலும் இப்படித்தானே நின்று விடுவாய். மணிக்காளை அடிக்கடி சொல்வான் - எனக்கு அவன் இவன் என்று சொல்லிப் பழக்கமாகி விட்டது. இப்பொழுது நாம் பழகுவது போலத்தானே நானும் அவனும் பழகினோம். பழக்கம் எளிதில் மாறுமா? நானும் அவனும் தனித்துச் சந்தித்தால் அவன் இவன் என்று குடும்பச் செய்திகளையும் அளவளாவிப் பேசிக்கொள்வோம். வேறு எவரும் இருந்தாலும் கூட என்னை நண்பனாக எண்ணித்தான் பேசுவான். ஆனால் நான்தான் கொஞ்சம் காஞ்சம் ஒதுங்கிக்கொள்வேன். மரியாதையாகவும் பேசிக்கொள்வேன்.'
و,
“நீ செய்வதுதான் சரி; இவ்வளவு செல்வன் ஆன பின்னும் உன்னை முன்பு போலவே நண்பனாக நினைக்கிறார் என்பதை விந்தைதான்.”
"தம்பி, அவன் தன்னை முதலாயி என்று நினைப்பதே ல்லை. இன்னும் தன்னை கை வண்டிக்காரனாக நினைத்துக் காண்டிருக்கும் ஒரே ஒருகாரணத்தால்தான் அப்படி இருக்கிறான். பிறவியிலேயே முயற்சியும், முன்னேற்றமும், பண்பும் அறிவும் பெற்றவன் மணிக்காளை, தன் நிலைமை என்றைக்கேனும் மாறிவிடக் கூடாதே என்றுதான் அந்தக் கட்டை வண்டியை விற்காமல் பத்திரமாக வைத்திருக்கிறான். படம் எழுதியும் தொங்கவிட்டிருக்கிறான்.
66
66
அதிசயமான மனிதர்தான் மணிக்காளை.”
ஆமாம்; அதிசயமானவன்தான். பேச்சோடு காரியமும் நடக்கட்டும்; கொஞ்சம் தண்டி
...
வா.
"கைவண்டி! ஒரு மூடை இருக்கிறது.கொண்டு போகிறாயா?” என்ற ஒரு குரல் கேட்டது.
66
ஒரு மூடையா? சரி; எங்கே இருக்கிறது?" என்றான்
தலைமலை.
கடையொன்றைச் சுட்டிக் காட்டினான் மூடைக்காரன். "மூடையைச் சந்தைப் பேட்டைக்கு கொண்டு செல்ல வேண்டும்; கூலி எவ்வளவு?"