திருக்குறள் கதைகள்
155
இருக்கும்வரை திட்டமும் அப்படித்தான் இருக்கும்; நடைமுறையும் அப்படித்தான் இருக்கும்; என்றான் இருளாண்டி.
“சரி, ஒதுக்கமாக நிறுத்து,”
தலைமலை மூடையைத் தூக்கிச் சென்றான். இருளாண்டி வண்டியைச் சாலையின் பக்கமாக நிறுத்தி வியர்வையைத் துடைத்தான்.புதுப் பழக்கம் ஆனமையால் கையில் வலி இருந்தது. ரு கைகளையும் தேய்த்துச் சிறிது வெதுப்பமாக்கினான்.
இரு
கை வலிக்கிறது இல்லையா! கொஞ்சம் இழு; தோப்புக்குப் போய் ஓய்வெடுக்கலாம்" என்று வண்டியைப் பிடித்தான்
தலைமலை.
“போக்குவரத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறேனே; காரணம் என்ன?” என்று நினைக்கிறாயா. அவ்வளவு விரிந்த உள்ளம் இன்னும் ஏற்பட்டுவிடவில்லை. நான் போக்குவரத்துப் பற்றிக் கவலைப்படத் தொடங்கியதே ஒரு கொடுமையான நிகழ்ச்சியால்தான். மணிக்காளையைப் பற்றிய பேச்சு இப்படித் திரும்பிவிட்டதே என்று நினைக்கிறாயா?
66
வண்டியும்
இந்த வண்டிப் பேட்டை யில் வாட கை கிடைக்கிறது அல்லவா! சொந்தவண்டி இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்தும் இழுப்பது உண்டு. இப்படி வாடகை வண்டி எடுத்துச் சம்பாதித்த ஒருவரைத்தான் சொல்கின்றேன்.
·
மிக மிகச் சிக்கனக்காரர் அவர். ஒரு சல்லி செலவழிப்பது ஆனாலும் பத்துத்தடவைகளாவது வகளாவது எண்ணிப் பாராமல் செலவழிக்கமாட்டார். எப்படியாவது அந்தச் சல்லியையும் செலவழிக்காது இருக்க முடியுமானால் அவ்வழியைத்தான் பின் பற்றுவார். வீட்டிலும் அவர், மனைவி, ஒரேமகன் இவ்வளவு பேர்கள்தான். அந்த அம்மாள் கணவனுக்கு ஏற்றவள். அவர் எவ்வளவு தந்தாலும் அதற்குள் குடும்பத்தை நடத்திவிடுவாள். துட்டு முடிவது அவள் அறியாத பழக்கம். அவள் உதவியாலும் கணவன் சமர்த்தாலும் குடும்பம் நன்றாக நடந்து வந்தது. எப்படியும் நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாயாவது முடிபோட்டு வைத்துவிடுவார் அவர்.
'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்' என்றான் இருளாண்டி.
“எல்லாம் வறுமை சொல்லி வைத்த பாடம் தான். சிறிது சிறிதாகப் பொருள் சேர்ந்தது. இருந்தாலும் இன்பமாக