உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

இல்வாழ்வு நடத்த அவரால் முடியவில்லை. பொருளால் மட்டும் வாழ்வு இல்லை. மனைவி, மக்கள், ஒட்டு, உறவு, எல்லாவற்றையும் பொறுத்தல்லவா உள்ளது.

"அவர் பேறு பெற்றவர் என்று சொல்லிவிடலாம்- அவருக்கு வாய்த்த மனைவியை நினைத்து. ஆனால் மகனை நினைக்கும்போது அப்படிச் சொல்லிவிட முடியாது. என் னென்னவோ பெரும்பாவங்களெல்லாம் பண்ணிய பயன்தான் இப்படி மகன் பிறந்தது என்று கூறாதவர் இல்லை. அவ்வளவு கெட்டவன்.

66

"தந்தை முடிபோட்டு வைத்த காசையும் ஏதாவது காரணம் காட்டித் தட்டிப் பறிக்கப் பார்ப்பான். வழி கிடைக்காவிடில் அயர்ந்த நேரம் பார்த்து அவிழ்த்துக் கொண்டு போய்விடுவான். வீட்டில் வைத்தால், எந்த ஒளிவுமறைவு ஆனாலும் எடுத்து விடுவான். தாயாரிடம் இருந்தால் வாய் வரிசை அன்றிக் கைவரிசை காட்டியும் பறிப்பான். இத்தகையவன் 'காலடி' பட்ட இடத்திலாவது காசு சேருமா?

“மணிக்காளைமேல், கைவண்டிக் கிழவருக்கு ஒரு நம்பிக்கை. அவரென்ன - கைவண்டி இழுப்போருக்குச் சங்கம் என ஒன்று இல்லை என்றாலும்கூட, சங்கம் அதன் தலைவர் - காப்பாளர் எல்லலாமே மணிக்காளை என்றால் தகும். அவ்வளவு நம்பிக்கையும் பெருமையும் வைத்திருந்தனர். நான் சொல்லிய கிழவர் பொன்னுத்தாத்தாவும், மீதப்பட்டதை மணிக்காளையி னிடமே தந்தார். மணிக்காளைக்குக் கிழவர் குடும்பநிலை நன்றாகத் தெரியும். இருந்தாலும் ஆரம்பத்தில் கிழவர் தந்த மீதப் பணத்தை வாங்கி வைக்க அவனுக்குச் சம்மதமில்லை." நான் பணம் வாங்கி வைப்பதில் எனக்குத் தயக்கம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் அச்செயல் தங்கள் குடும்பத்தைப் பிளவு பண்ணிவிடக் கூட என்று தடுத்தான். குடும்பம் பிளவு பட்டுவிடவேண்டும் என்று நான் நினைக்கிறேனா? அப்படி ஆகக் கூடாது என்று என்னால் ஆனமட்டும் பார்க்கிறேன். வெற்றி பெற முடியவில்லை. அந்த முயற்சியை மீண்டும் செய்து கொண்டே நான் பிச்சைக்காரனாகிவிட வேண்டுமா? இனி என்னால் ஒன்றும் முடியாது. எனக்காக இல்லாவிடினும், என்னையே தஞ்சமாகக் கொண்டிருக்கும் மனைவிக்காகவாவது உன்னிடம் இந்த மீதத்தைச் சேர்த்து வைக்க வேண்டும் என்னும் நிலைமை உண்டாகி விட்டது.” என்று கிழவர் மன்றாடினார். மணிக்காளையும் பொன்னுத்தாத்தா குடும்பத்தில் ஒருவனாகப்