உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

157

பழகிக் கொண்டும் கிழவர் மகனைத் திருத்த முயன்றான். முடியவில்லை. அதற்குப் பின் அவர் பெயரால் குறித்துக் கொண்டு பணத்தை இருப்பு வைத்தான். இது கிழவர் மகனுக்கு எவ்வளவு வெறுப்பாக இருந்தது என்பதை நான் அறிவேன்.

66

'இதில் என்ன இருக்கிறது. தாத்தா என்ன தலையிலா கொண்டுபோகப் போகிறார். வீட்டிலே வைத்திருக்க உள் பயம் இருக்கிறது; வெளிப்பயமும் இருக்கிறது. வங்கியிலே போட்டு வைப்பது போலப் போட்டு வைக்கிறார். நாணயமும் நம்பிக்கையும் உடை ய மணிக்காளையிடம் போட்டுவைப்பது வங்கியில் போட்டு வைப்பது போன்றதுதானே என்றான் இருளாண்டி.

தோப்பில் வண்டியை நிறுத்திவைத்து, இரண்டு வடை களைத் தெருக் கடையில் வாங்கித் தின்று, தண்ணீர் குடித்தனர். இருளாண்டிக்கு அயர்ச்சி மிகுதியாக இருந்தது. தலையைக் கீழே போட்டால் உறங்கி விடுவான். ஆனால் தலைமலை

சொன்னான்:

"எடுத்த சுமையைக் கொண்டு சேர்க்காமலோ, ஏற்றிய பாரத்தை உரியவரிடம் ஒப்படைக்காமலோ உறங்கி விடபவன் ஒருவேளை இல்லாவிட்டாலும் ஒருவேளை இழந்து போவான்.

மூட்டையடிப்பவனை வலியக் கைந் நீட்டி அழைத்து எடுத்துக்கொண்டு போ என்று கொடுப்பது போன்றது” என்று மணிக் காளையிடமும், என்னிடமும் பொன்னுத் தாத்தா பல தடவைகள் சொன்னது உண்டு” என்றான் தலைமலை.

தாக்குதலைச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான் இருளாண்டி. கைகளைத் தேய்த்துக் கண்களைச் சூடாக்கினான். 'மேலே சொல்' என்று பேசத் தூண்டினான்.

கிழவருக்கும் மகனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சச்சரவு வளர்ந்தது. ஏச்சுப் பேச்சுக் கூட முற்றியது. தந்தை மகனுக்கு இடையே தாயும் மணிக்காளையும் பலப்பல அல்லல்கள் பட்டனர். திட்டும் வசையும் வாங்கினர். என்ன இருந்தாலும் கிழவர் பெயரால் பணம் ஏறிக்கொண்டு வந்தது.

பணத்தை எந்த வழி கொண்டாவது பறித்து விட வேண்டும் என்று முனைந்து நின்ற மகன், அவனுக்குப் பிடித்தமான சிலரை ஏவி வைத்து வியாபாரம் செய்ய, தொழில் செய்ய என் றெல்லாம் கேட்டனுப்பினான். உள்ளதை வைத்துக் காப்பாற்றத்