உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

159

அந்தக் குறையை நீங்கள் நிறைத்தீர்கள்” என்று பேணி வந்தான் மணிக் காளை. அவளும் கொஞ்சம் தேறியிருந்தாள்.

பல வேளைகளில் மகன் வந்து “அப்பா கொடுத்த பணத்தை வாங்கித் தருகிறாயா இல்லையா?" என்று தாயை வற்புறுத்தினான். நாலுபேர் கூடிய இடங்களிளெல்லாம், மணிக்காளையைப் பற்றி வசை பொழிந்தான். 'இது என்ன கேவலம்!' என்று கிழவர் கணக்குகளையெல்லாம் காட்டி, சல்லியும்பாக்கி வைக்காமல் தீர்த்தான். அவன் தாய்க்குப் பணம் தருவதில் சம்மதமில்லை என்பதை அறிந்து, அவள் அறியாமலே தான் கணக்குத் தீர்த்தான். உட்கார்ந்து தின்றால் ஊரளவு சொத்தே நிற்காதே! ஓட்டம் பிடித்தது ஓராண்டுக்குள் எண்ணூறு ரூபா எந்த மட்டுக்கும்?

-

இதற்குள் மணிக் மணிக் கான காளைக்கு ளக்கு நல்ல காலம் போல் ருக்கிறது. தேடிச் சேர்ந்திருந்த பணத்தைக் கொண்டு இரண்டு கை வண்டிகள் வாங்கினான். வந்த இலாபத்தை அழிக்காது மேலும் ஒன்றிரண்டாக வண்டிகள் தொடுத்து வாங்கினான். பொன்னுத் தாத்தா “மண்டை உடைந்தாலும் ஒருவேளை கூடிக் கொள்ளும்; ஆனால் ரூபா நோட்டை உடைத்தால் (சில்லறை யாக்கினால்) ஒரு நாளும் கூடவே கூடாது என்பார். அது

மெய்யாயிற்று.

மணிக் காளைக்கு வேண்டிய 'லாரி புரோக்கர்' ஒருவர் இருந்தார். அவர்மணிக் காளையுடன் நெடுங்காலம் பழகியவர். நன்றாக அறிந்தவர். அவருக்கு அவர் தொழில் வழியாக நல்ல வருவாய் இருந்தும்கூட வெளியூருக்குக் குடியேற வேண்டியவராக இருந்தார். ஒரே மகளை நல்ல இடத்திற்குத் திருமணம் செய்து, அவளுடன் குடும்பத்துடன் போக வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

இவ் வேளையிலே அவர்கண்ணோட்டம் மணிக்காளை மேல் விழுந்தது. இடத்திற்காகவும், வாடிக்கைப் பெயருக்காகவும் இரண்டாயிரத்து இருநூறு ரூபா வாங்கிக் கொண்டு மணிக் காளைக்கே விற்று விட்டார்.

“மணிக்காளைக்கு எதிர்பாராத வாய்ப்பு இது. இருந்த இடத்திலேயே வருபவர்களிடம் பேசிப் பேசிப் பணம் வாங்க வேண்டிய வாய்ப்பு அல்லவா!” என்றான் தலைமலை.

66

‘ஆமாம்! மனம் போல் வாழ்வு” என்பது சரியாகி விட்டது. இப்படிப் பட்டவர்கள் முன்னுக்கு வந்தால் தான் நீதி, நேர்மை,