உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

கடவுள் இவற்றின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட முடியும்" என்றான் இருளாண்டி.

"கேள்; புரோக்கர் வேலை ஒப்பந்தமானதற்கு நாங்கள் கொண்ட மகிழ்ச்சி அளவு கூட மணிக்காளை கொள்ளவில்லை. இது சூதாட்டம் இப்பொழுது இப்பக்கம் சாய்ந்திருக்கிறது. து அடுத்த வேளை எப்பக்கமோ? என்று சொன்னான். அவன் அவ்வாறு சொல்வது கண்டு ‘பைத்தியம்' என்று நாங்கள் திட்டினோம். எங்கள் வாடிக்கை நண்பன் அல்லவா!

மணிக்காளை சொல்லியதில் உண்மையும் உண்டு என்பது அந்த வார இறுதியிலே வெளிப்பட்டது.

பொன்னுத் தாத்தா மனைவி மணிக்காளை பொறுப்பில் தானே இருந்தாள்! அவள் அவள் ஒரு ஒரு வாரம் கழித்து ஒரே படுக்கையாகி விட்டாள். எழுந்திருக்க வில்லை. சோறு தண்ணீர் மருந்து எதுவுமே ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள். ‘நோய் நோய்' என்று தத்தளித்தான் மணிக்காளை. கிழவி பேச்சையும் நிறுத்திக் கொண்டாள். யாரிடம்? அவளை உயிராக எண்ணிக் கொண்டிருக்கும் மணிக்காளையினிடம்.

என் முன்னாக எத்தனையோ 6 முறை மணிக்காளை கண்ணீர் வடித்திருக்கிறான்; என்ன இருந்தாலும் பெற்ற மகனாக இருந்தால் அவனிடம் இப்படிக் காரணமில்லாது பேச மறுப்பாளா? பார்க்கப் போகும் போது முகத்தைத் திருப்பிக் கொள்வாளா? ஏதாவது வேண்டுமா? மருந்து தரட்டுமா? வைத்தியரைக் கூட்டி வரட்டுமா? என்றால் ஏதேனும் அன்பான சொல் சொல்லாது, "மானமில்லாமல் வாழ விரும்பும் எவளுக்காவது மருந்து கொடு; சோறு கொடு. எனக்கு வேண்டாம் என்பாளா? நான் என்ன தவறு செய்தேன் என்பது எனக்குப் புரியவில்லையே என்று பல முறைகள் அழுதான். கிழவியின் காலில் விழுந்தும் மன்றாடிக் கேட்டான். கிழவியின் நிலைமையில் எந்தவொரு மாற்றமும் ஏற்பட வில்லை.

6

"அப்பாடா! இது என்ன அநியாயம்; கிழவிக்கு ஏன் வ்வளவு கெட்ட பிடிவாதம் நன்றாகத் தானே இருந்

தாள்" என்றான் இருளாண்டி.

“மணிக்காளை உன் வீட்டில் தங்குவதே பாவம்; தண்ணீர் குடிப்பது துரோகம்; வேறெங்கும் போய்ச் செத்தாலும் சாவேனே ஒழிய இங்கிருக்க மாட்டேன்” என்று சொன்னாள். மானம் பெரிதா? உயிர் பெரிதா? என்றால் நான் உயிரை விட

66