உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

161

மானம்தான் பெரிது என்பேன். சிலருக்கு மானத்தைப் பார்க்கிலும் உயிர் சிறந்ததாக இருக்கலாம். அவர்கள் போகட்டும். என்னைப்பற்றித்தான் பேச்சு. உயிரை விட்டாவது மானத்தைத் தான் காப்பேன். உன் வீட்டில் இன்னும் இருந்து மானம் இழக்க மாட்டேன்” என்றாள்.

66

“அம்மா! நீ தானே என் தாய். நீ பெற்று எடுக்காத ஒன்று தவிர்த்து வேறு ஒன்றும் இல்லையே! நானும் உன் வயிற்றில் பிறக்காவிட்டாலும் பெற்றெடுத்த தாயைப் போன்று தானே பேணினேன். ஏதாவது தவறு இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாமே! அதற்காக இப்படியா என்னைத் துயருக்கு ஆளாக்க வேண்டும்” என்று கண்ணீர் கசியக் கேட்டான்.

“மணிக்காளை உன்னைச் சொல்ல வாயில்லை; காலக் கோளாறு; என் தலைவிதி. எத்தனை இருந்தாலும் என் வயிற்றில் பிறந்த மகனாக இருந்தால் இப்படி ஒரு காரியம் செய்திருக்க மாட்டாய்" என்றாள். எதையோ உள்ளே வைத்துக் கிழவி புண்பட்டிருக்கிறாள். இல்லாவிடில் வெள்ளையுள்ளம் படைத்த அக்கிழவி இப்படிப் பேசி யிருப்பாளா?

என்

66

'ஆமாம் பிறகு!”

“பிறகென்ன! கிழவி சொல்ல மறுத்துவிட்டாள். “கிழவியின் சொந்த வாழ்க்கைச் சம்பந்தப்பட்டது. வெளிப்படையாகச் சொன்னால் அவள் மானம் சம்பந்தப்பட்டது. அதற்கும் நமக்கும் தொடர்பு இல்லையென்றாலும் நாம் அறிந்தோ அறியாமலோ தொடர்பு கற்பித்துக் கொள்ளத்தக்க ஒன்றுநடந்து விட்டிருக் கிறது. அதைக் கிழவி சொல்ல விரும்பவில்லை. சொல்ல முடி யாததாக இருக்கும் போது சொல்லித்தான் ஆகவேண்டும் று நாம் வற்புறுத்த நமக்கு என்ன உரிமை உண்டு? உண்மை வளிப்படும் வரை நாம் ஊமையாக இருக்க வேண்டியது தவிர்த்து வழியென்ன? அல்லது பேசிப் பயனுண்டா? எத்தனையோ குற்ற மற்றவர்கள் உலகுக்கு உண்மை புலப்படும் வரை குற்றவாளிகளாகக் கருதப்பட்டுக் கடுந்துயரம் அடைந்ததும், அத்துயரிலே மாண்டு மறைந்ததும் கூட இல்லையா? எல்லாம் பட்டு முடிந்த பின்னும் ஓரிருவர் ஆராய்ந்து உண்மை கூறிய பின் உலக மன்றத்தில் அசையாத ஓரிடம் கொண்டு கொலு வீற்றிருக்க வில்லையா? கடமையைச் செய்ய வேண்டுவது நம் பொறுப்பு. பயனைப் பற்றி நமக்கென்ன கவலை” என்று மணிக்