172
இளங்குமரனார் தமிழ்வளம்
8
காண்டிருந்தன. சரக்குகள் இல்லையாதலால் சுறுசுறுப்பு ல்லை. யாரும் தம் பக்கத்தில் இல்லாமையால் தலைமலை இருளாண்டியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான். தலை மலையின் திகைப்பு ருளாண்டிக்கு என்னவோ போல் இருந்தது.
“கிழவி சொல்லிய காரணம் ஒரு வேளை சொல்லக் கூடாததாக இருந்தால் வேண்டாம்; குற்றமில்லை என்றால் சொல்லு" என்றான்.
“உன்னிடம் சொல்வதால் நன்மை இல்லை என்றால் அவள் கதையை இவ்வளவு சொல்லியிருக்கவே மாட்டேன். நீ நீ வேறு நான் வேறு இல்லை” என்று கதையைச் சொன்னான்.
கிழவி குமரியாக இருந்தாளாம். அப்பொழுது அவளுக்கு ஒருவன் மேல் காதல் ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்து அந்த அன்பை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டார்களாம். திருமணம் செய்துகொள்வது உறுதி என்று தலையில் அடித்து ஆணையும் சொல்லியிருக்கிறான். ஆணை சொல்லிய அளவுடன் சரியாகி விட்டது போல் இருக்கிறது. ஆளையே பல மாதங்கள் காண வில்லையாம். அந்தக் காலத்திற்குள் இவளுக்கும் திருமண முயற்சிகள் பலமாக நடந்திருக்கின்றன. வந்தவர்களை யெல்லாம் அவனை நினைத்து நினைத்துப் பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டிருக்கிறாள். பெற்றோர்களும் மகள் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்காது “சரி; வரட்டும்; பொறுத்துச் செய்யலாம்;” என்று அமைதியடைந் திருக்கிறார்கள். இத்தகைய வேளையில் காதலன் எவளோ ஒருத்தியை - நல்ல பணக்காரியாம் - மணம் செய்து கொண்டு ஊருக்கு வந்து விட்டானாம். இதைப் பார்க்கப்பார்க்க எரிச்சலாக இருந்திருக்கிறது அவளுக்கு. இப்படிப்பட்ட கயவன்' என்பதை முன்னமே அறிந்து கொள்ளாதது தன் குற்றம் என்று நொந்து திருமணமே வேண்ட வேண்டாம் என்று வெறுத்திருக்கிறாள். பெற்றோர்கள் விடுவார்களா? எப்படியோ
வற்புறுத்தல் சய்து பொன்னுத் தாத்தாவுக்குத்
திரு
மணம் செய்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் வாழ்வில் தோல்வி இல்லையா?
“ஆமாம்! இதற்கும் மணிக்காளைக்கும் என்ன தொடர்பு!” முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் போடும் முடிச்சாக அல்லவா உள்ளது” என்றான் இருளாண்டி.