திருக்குறள் கதைகள்
வ
173
"கேள்; மணிக்காளை புரோக்கர் ஆனான் அல்லவா! அவனுக்கு அந்த வேலையைத் தந்தானே அவன் தான் வேலையைத் தந்தானே அவன் தான் கிழவியின் பழைய காதலனாம். கிழவிக்கு எத்தனையோ முறைகளில் உதவி செய்யப் பார்த்தானாம். கிழவி வாயிற்படி ஏற விடவில்லையாம். தாத்தா இறந்த போது வீட்டுக்கு வந்தவனையே மானம் போகக் கேட்டு அனுப்பினாளாம். என்ன இருந்தாலும் தான் செய்தது தவறு என்று அவன் உணர்ந்து கொண்டதாலும், எப்படியும் அவளுக்கு உதவ வேண்டுவது தன் கடமை எனத் தெளிந்ததாலும், அவள் எந்த உதவியையும் ஏற்கமாட்டாள் ஆதலால் அவளை ள ஆதரிக்கும் மணிக்காளைக்குத் தன் வேலையைக் கொடுத் திருக்கிறான். இல்லையேல் அவன் தரவே மாட்டான் என்று கிழவி காரணம் காட்டுகிறாள்" என்றான் தலைமலை.
66
ம்
"நல்ல காரணம்! கிழவி ழவி உள்ளம் வெள்ளையானது என்று என்னி என்னிடம் ஒருமுறை சொன்னாய். அவள் உள்ளம் வெள்ளையாவது கறுப்பாவது? வைராக்கிய நெருப்பு என்று சொல்லு. பாவம்! மணிக்காளைக்குத்தான் அல்லல் என்று சோர்வுடன் உரைத்தான் இருளாண்டி.
66
‘அதுதான் இல்லை! மணிக்காளை தவிர்த்து வேறு யாருமாக இருந்தால் அப்படித்தான் நிலைமை ஆகும். ஆனால் அவன் என்ன சொன்னான் தெரியுமா? தங்கம் தன் ஒளி உடையது. அதனை மேலுமேலும் ஒளியுடையதாக்க வேண்டுமானால் தீயிலே வெந்து வெந்து உருக வேண்டும். மனிதனும் உயர்ந்தோனாக, நல்லோனாக, புகழாளனாக விளங்க வேண்டுமானால் துன்ப நெருப்பிலே காய்ந்து காய்ந்துதான் ஆக வேண்டும்.
66
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு”
وو
என்பதில் எவ்வளவு வாழ்க்கைத் தெளிவு உள்ளது என்பதை இன்னும் உனக்கு விளக்கிக் கூற வேண்டியது இல்லையே ய என்பான். அவனே சொல்வான் “மரங்களிலே ஒன்று பூவரசு. அதனை வெட்டிவிட வெட்டிவிடத்தான் காழுமையாகவும், பக்கம் விரிந்தும் நன்றாக வளரும் வெட்டாவிட்டால் கொழுமையோ வளமான வளர்ச்சியோ இருக்காது. ஆனால் வேம்பு அப்படிப் பட்டது இல்லை. வெட்டி விட்டால் வளமும் கொழுமையும் தொலைந்துவிடும். மனிதர்களிலும் பூவரசாக வாழ்பவர்கள் துன்பம் நேர நேர வளம் பெறுகிறார்கள்; உரம் பெறுகிறார்கள். வேம்பாக வாழ்பவர்கள் வளம் இழக்கிறார்கள்;