174
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
உரம் இழக்கிறார்கள். என் உள்ளத்தை உர மூட்டுவதற்காகத் தான் இளமையிலே தாய் தந்தையரைப் பறித்த இயற்கை, வறுமையைத் தந்து, வண்டியிழுக்கச் செய்து, பொன்னுத் தாத்தாவை உறவாக்கி, அவரையும் நடுவில் கொள்ளையிட்டு, அவர் மகனைப் பகையாக்கி, அவர் மனைவியை என்னிடம் ஒப்படைத்து, அவளும் என்னைவிட்டு வெளியேறினால் சரி, இல்லையேல் சாவு என்னுமாறு ஆக்கிவிட்டிருக்கிறது. திடுதிப்பென்று ஒருவனுக்கு இப்படி ஏற்பட்டிருந்தால் வந்த ல் துயரங்களையெல்லாம் வரவேற்றுக் கொண்டு புன்முறுவல் பூப்பானா? எனக்குப் பழக்கமாகி விட்டது. மருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பழக்கமானவன் - மருந்தையே உணவாக ஆக்கிக் கொண்டவன் - புதிதாக மருந்து சாப்பிடுபவனைப் போன்று முகத்தைச் சுழித்து, நாவைப் பிதுக்கி, குடலைப் பிடுங்கிக் கொண்டு இருப்பானா? எனக்குத் துன்பம் பழக்கமாகிவிட்ட சிரித்துக் கொண்டு அனுபவிக்கின்றேன்; நீயும் அப்படித் தானே என்பான். “மணிக்காளை நெருப்பின் இடையே கூட வாழப் பழகி விட்ட வன் இல்லையா இருளாண்டி!” என்றான்
தலைமலை.
66
L
து;
ஆம்! நெருப்பிலே பிறந்து, நெருப்பிலே வளர்ந்து, நெருப்பிலே வாழ்பவர்களுக்கு அது ஒருவேளை பழக்கம் என்று சொல்லி விடலாம். ஆனால் நெருப்பிலே பிறந்து வளர்ந்தாலும் நீரிலே வாழப் பழகி விட்டவர்களுக்குப் பின்னும் நெருப்பிலே வாழ்வது சங்கடமில்லையா!” என்றான் இருளாண்டி.
"செயற்குரிய செய்வதிலே என்ன சிறப்பு! செயற்கு அரிய செய்வதிலே தானே சிறப்பு!” என்று தங்களை நோக்கி ஒருவன் வருவது கண்டு நிறுத்தினான் தலைமலை. வந்தவன் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு ஏதோ உளறினான்.
66
"அரைபோல் இருக்கிறது” என்றான் இருளாண்டி. ஆமாம்; கிழவி மகனுக்கு என்ன ஏற்பாடு செய்தீர்கள்? என்று வழியில் நடந்தவனைப் பார்த்துக் கொண்டு கேட்டான் இருளாண்டி.
"கீழ்பாக்கத்திற்குத்தான் அவனை அனுப்பினோம். அவனை மணிக்காளையுடன் அனுப்ப முயன்றேன். மாட் டேன் என்று பிடிவாதம் செய்து விட்டான்.பின்பு நானும் உடன் போனேன். இரயில் ஏறியதிலிருந்து அவன் சிரிப்பு உச்சமாயது. மணிக்காளையும் சிரித்தான்! இரண்டிற்கும் இருந்த இடை வெளி எனக்கு எத்தனையோ வாழ்க்கைக் காட்சிகளை முன் னிறுத்திக் காட்டின” என்று பேச்சை நிறுத்தினான் தலைமலை.