இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடுக்கண் அழியாமை
1.
இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில்.
2. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.
3. இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர்.
4. மடுத்தவா யெல்லாம் பகட ன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.
5. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்.
6. அற்றேமென் றெல்லல் படுபவோ பெற்றோமென் றோம்புதல் தேற்றா தவர்.
7. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்,
8. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.
9. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.
10. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு.