உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. மெய்மைப் பொய்

"மணிமுத்து! வெள்ளை வாங்கிக் கொண்டு வா. போனேன் வந்தேன் என்று இருக்க வேண்டும்! தெரிந்ததா?" என்று சீசாவையும் சில்லரையையும் தந்து அனுப்பினான் மூக்கன். சேவல் சண்டை பார்க்காமல் விட்டுச் செல்ல மணிமுத்துக்கு மனமில்லை. ஆனாலும், அப்பன் சொல்லைக் கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் அறியாதவன் அல்லன் அவன். வேண்டா வெறுப்புடன் விரைந்து கடைக்குச் சென்றான் மணிமுத்து.

-

மூக்கன் குடும்பம் செல்வமான குடும்பமாகத்தான் இருந்தது. மூக்கன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டானோ இல்லையோ தெருவில் நிற்க வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டான். அவனது பாட்டனார், தந்தையார் அரும்பாடு பட்டுத் தேடிவைத்திருந்த சொத்தையெல்லாம் குடி, சூது ஆகியவற்றிலே தொலைத்தான். பொருளைத் தொலைத்ததுடன் உடலையும் கெடுத்துக் கொண்டான். நோய் நொம்பலம் இல்லாமல் வளர்ந்த மூக்கன், மெலிந்து எலும்புக் கூட ாக மாறிவிட்டான். உடல் கெட்டபின் உள்ளம் கெடாமல் இருக்குமா? கண்ட கண்ட போக்குகளிலெல்லாம் போய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தேய்ந்து கொண்டு வந்தான். வறுமைத் துன்பமும், நோய்த் துயரும் அதிகரிக்க அதிகரிக்க இன்பவழி ஏதாவது கிடைக்காதா என்று தேடித் தேடித் திரிந்தான். இவ்வளவு கெட்டுப் போன உள்ளம் உடையவனுக்கு எது இன்பமாக இருக்கும்?

நல்லவர்களைப் பார்ப்பதோ, அவர்களோடு பேசுவதோ இன்பமாக இல்லை. இயற்கை வளம் வாய்ந்த இடங்களைப் பார்ப்பதோ இயற்கைக் காட்சிகளைக் காண்பதோ இன்பமாக இல்லை, புத்தகங்களையோ செய்தித் தாள்களையோ படிப்பது இன்பமாக இல்லை. எப்படி இருக்க முடியும்? காக்கைக்கு விருப்பமானது பிணம்தானே!

தீயவர்கள் சேர்க்கை, சூது, கள், சாராயக் குடிவகைகள் இவையே அவனுக்கு இன்பமாயின. எப்பொழுது பார்த்தாலும்