உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

வழக்கம்போல் குமரவேல் அன்றும் பூசை முறைகளைச் செய்தார். ஆனால் முடித்துவிட்டு உடனே வந்துவிடவில்லை. தூண் ஒன்றிலே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினார். பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக மின்னலிட்டுக் கொண்டு வந்தன.

குமரவேல் பெருஞ் செல்வர். அவர் பெயரால் ஐந்தாறு கடைகள் நடந்துவந்தன. பண்ணை விவசாயம் வேறு இருந்தது. மாடு, மனை, வீடு மோட்டார் ஆகிய எதற்கும் குறைவில்லாத வாழ்க்கை. பொருட்செல்வம் போலவே அருட்செல்வமும் நிரம்பக் கொண்டிருந்தார்.

"குமரவேல் குணக்குன்றம்” என்று மக்கள் பாராட்டும் படி வாழ்ந்தார். அவரைக்கண்டு தங்கள் நிலைமையைச் சொல்லிய எவரும் தகுந்த பயனடையாமல் போனது இல்லை. அதனால் நாள்தோறும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தேடி வருவதும் போவதுமாகவே இருந்தனர். தேடிவந்தவர்களுக் கெல்லாம் விருந்துக்கு, எத்தகைய குறைவும் இருக்காது.

குமரவேல் ஊரில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்

வழக்கமாகச் செய்யவேண்டிய கடமை அது.

க்

குமரவேலின் பொழுதைப் பொதுக் காரியங்கள் இழுத்துப் பிடித்துக்கொண்டன. கடையையோ, நிலத்தையோ நேரில் சென்று பார்க்க அவரால் முடியவில்லை. உள்ளூரிலே தங்க முடியாமல் வெளியூர் வெளியூர் என்று அலைந்து திரிந்த அவர் வீட்டுக் காரியங்களை எப்படிக் கவனிப்பார்! பாவம்! மற்றவர்களை நம்பினார் நன்றாக நம்பினார் நன்றாக நம்பினார்! ஆனால் நம்பிக்கைக்குக் கேடு செய்யக்கூடாது என்று எத்தனை பேர்தான் எண்ணுகிறார்கள். பணம் கிடைத்தால் போதும் அது எந்த வழியால் வந்தால் என்ன என்று எண்ணுபவர்கள் இருக்கத் தானே செய்கின்றார்கள்.

வாணிகத்தையும், உழவையும் தமக்கு உறவினனான கந்தப்பனிடம் ஒப்படைத்திருந்தார். குமரவேல் கந்தப்பனும் அன்பனாகவும் தொண்டனாகவும் நடந்து வரத்தான் செய்தான் அவனும் பத்தாண்டுகள் தன் பொருள் போல் நன்முறையில் பேணி வளர்த்து வந்தான். ஆனால் உள்ளம் ஒரு நிலையிலே இருப்பது இல்லையே! எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் ஒருசில ல வேளைகளில் கெட்டுப்போய் விடுகின்றானே!

பணத்தாசைதானே குணத்தைக் கெடுத்துவிடுகின்றது.