உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

வடி

நான்தான் வைரவன் மகன்.

முரு

வடிவேலா நீங்கள்... ஐயையோ!

191

வடி

6

வடிவேல்தான் நான். கவலைப்படாதீர்கள். நீங்கள் திட்டியது காணாது. நான் செய்த கேட்டினால் நீங்கள் தொல்லைப்படுகிறீர்கள். எவனோ போட்ட வாழைப்பழத் தோலை மிதித்து வழுக்கிக் காலை ஒடித்துக் கொண்டேன் நான். அண்ணே "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா, பிற்பகல் தாமே வரும்" என்று திருக்குறள் உரைப்பது சரியாகத்தான் இருக்கிறது. நீங்கள் வருத்தப்பட்டுக் கொள்ள மாட்டீர்களே... நீங்கள் தான் வாழைப்பழத் தோலைச் சாலையில்

போட்டிருப்பீர்களோ?....

முரு

இருவரும் சிரிக்கின்றனர்.)

நான் சாலையில் தாராளமாக வாழைப் பழத்தோல் போடுவதுண்டு: ஆனால், நான் போட்ட பழத் தோல்தான் உங்களை வழுக்கி விட்டதென்று சொல்ல முடியுமா?

வடி

இல்லை! இல்லை! நான் வேடிக்கையாகச் சொன்னேன்! நீங்களும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது இல்லை என்று சொல்லுகிறீர்கள்.

முரு

ஆமாம் தம்பி! நான் தெரியாமல் உங்களைத்

திட்டியதை மனத்தில் போட்டுக் கொள்ளாதீர்கள்.

வடி

ஐயையோ! இதில் என்ன தவறு இருக்கிறது. நீங்கள் என்னைத் தெரியாமல் எதிரில் பேசிவிட்டீர்கள். எத்தனையோ பேர்கள் மறைமுகமாகத் திட்டியிருப்பார்கள். இனி மேலாவது நான் புத்தியோடு நடந்துகொள்ள வேண்டுமே தவிர, திட்டியதற்குக் கவலைப் படலாமா? ஆமாம் அண்ணே, எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் இனிமேல் நம் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதுடன் சாலையும் சுத்தமாக இருக்கப் பார்க்க வேண்டும்.

முரு

ஆமாம் தம்பி. அதைத்தான் எழுதிப்

போட்டிருக்கிறார்களே.

வடி

முரு

என்ன எழுதிப் போட்டிருக்கிறார்கள்?

சாலையைச் சுத்தமாக வையுங்கள்; தபால் நிலையத்தைச் சுத்தமாக வையுங்கள் - இப்படியெல்லாம்!