192
வடி
இளங்குமரனார் தமிழ்வளம் - 8
அண்ணே! வைவதிலேயும் சுத்தமாக வைய
வேண்டுமோ? என்ன மரியாதை மரியாதை வேண்டிக் கிடக்கிறது வைவதில். அது பெரும் தவறு அண்ணே! தபால் நிலையத்தைச் சுத்தமாக வைக்கவும்; சுத்தமாக வைத்திருக்கவும்; தூய்மையாக வைக்கவும் என்று எழுதவேண்டும்! அதைப் பற்றிக் கவலைப் படாமல் வையுங்கள் திட்டுங்கள் என்றெழுதுகிறார்கள்.
முரு
சரிதான்! தெருவைத் துப்புரவு செய்வதற்குள் தெருப்பலகைகளையும், விளம்பரங்களையும், சுவர் ஒட்டி களையும் துப்புரவு செய்யவேண்டும்போல் இருக்கிறதே.
வடி
அதனால்தானே பாரதியார், “ஒட்டகத்திற்கு ஒரு பக்கமா கோணல்; தமிழகத்திற்கு ஒரு பக்கமா அழிவு” என்ற பாருளில் சொன்னார். பெரிய பெரிய காரியங்கள் செய்வதுதான் அறம், நல்வினை என்று சொல்கிறார்கள். எந்தக் காரியத்தை நல்ல எண்ணத்துடன் செய்தாலும் அது அறம்தான்!
முரு : நல்ல திட்டம் தம்பி! நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டுமே!
வடி
இப்பொழுது வந்தார்களே; சாரணர்கள். எப்படித் தொண்டு செய்கிறார்கள்! நாம் இவர்களுக்கு உதவுவது நல்லதொண்டு இல்லையா?
முரு
சரிதான் தம்பி; பணம்?
வடி
பணம் எதற்காக? மனத்தில் தொண்டு எண்ணம் வேண்டும்; கையில் பணம் இல்லாவிட்டாலும் குற்றம் இல்லை. நாட்டில் நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டதோ பிறகு பணத்திற்குப் பஞ்சம் இல்லை.
முரு
சரி தம்பி, நான் உங்களுடன் ஒத்துழைக்
கிறேன்.
வடி
- மிகச் சரி.
(மருத்துவ நிலையப் பணியாள் சிங்கப்பன் வருகிறான்.)
சிங்
ஐயா நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டிய
நாள். உங்களுக்குக் குணமாகிவிட்டது.
முரு
சிங்கனா! சரி சரி! இன்றுதான் உடல் குண மானதுடன் உள்ளமும் குணமாயிற்று. நல்ல நேரம் பார்த்துப் போகச் சொன்னாய்.