4
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
அடைத்துவிடலாம் என்ற எண்ணத்தால்தான் இதுவரை சொல்லவில்லை. உங்கள் மேல் வைத்த நல்லெண்ணந்தான் இவ்வாறு செய்யவைத்தது” என்று நன்றாக நடித்தான் கந்தப்பன். குமரவேலுக்கு ஒன்றும் ஓடவில்லை. இனிப் பழையதை நினைத்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்று எண்ணினார். “கடன்" என்று யாரும் தலைவாசல் மிதித்து வரக்கூடாது என்ற நோக்கத்தால் இருக்கும் கடை. வீடு, நிலம் எல்லா வற்றையும் விற்றுச் சேர்த்து ஒரு வாரத்திற்குள் கணக்கை முடித்து விட்டார்.
கணக்கை முடித்தார் குமரவேல். ஆனால் முறிந்த மனத்தை நிமிர்த்த அவரால் முடியவில்லை: ஊர் போற்ற, வட்டாரம் புகழ, உயர்ந்த வாழ்வு வாழ்ந்த குமரவேல் இருந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டில் வாழ வேண்டுமானால் தாங்கமுடியுமா? எத்தனை எத்தனை வேலையாட்கள்! எவ்வளவு உயர்ந்த வாழ்வு! எல்லாம் போய்விட்டது. பித்துப் பிடித்தவர் போல ஆகிவிட்டார்.
குமரவேல் சில ஆண்டுகளுக்கு முன்னாகவே தம் மனைவியை இழந்துவிட்டார். அந்தக் கவலையைப் பொதுத் தொண்டு புரிவதிலும், ஒரே மைந்தன் வளவனை வளர்ப்பதிலும் மறந்தார். ஆனால் பாழுது எல்லாக் கவலைகளும் ஒன்றுசேர்ந்து விட்டன. மனைவி இழப்பு, மகன் வறுமை, நம்பிக்கை மோசம், செல்வக் கேடு, ஏழ்மை வாழ்வு - இவ்வளவும் சேர்ந்தால் உள்ளம் கல்லாக இருந்தாலும் கரைந்துவிடுமல்லவா! குமரவேல் மட்டும் இதற்கு எப்படி விலக்காக முடியும்?
6
குமரவேல் பெருந்தன்மை படைத்தவர் அல்லவா! அதனால் பலர் முன்வந்து தேற்றினர். உதவி செய்வதாகவும் வாக்களித்தனர். தங்கள் இல்லங்களில் வந்து இருக்குமாறும் வேண்டினர். ஆனால் குமரவேல் உள்ளம் எதற்கும் இடம் தரவில்லை, வாழ்ந்தவர் தாழ்ந்துவிட்டால் ஏற்படும் அல்லல் துதான்! பிறர் உதவியை நாடி நிற்கும் மனம் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. பழைய நினைவுகளே வந்து துன்புறுத்தும். பழைய செல்வம் என்ன, சீர் என்ன என்ற எண்ணங்கள் வரும் பொழுது வாழ்க்கை வெறுக்குமே ஒழிய, எப்படியாவது பிறர் உதவியால் வயிறு வளர்ப்போம் என்ற நினைவு வராது. அப்படித்தான் இருந்தார் குமாரவேலும்.
குமரவேலின் நிலைமையை அவர் நண்பரான அழகப்பர் அறிந்தார். அழகப்பர் மதுரையிலே ஒரு துணிக் கடைக்காரர்;