உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

LO

5

குமாரவேல் தந்த முதலைப்போட்டுக் கடை தொடங்கி இன்று நல்வாழ்வு வாழ்பவர். பழைய நன்றியை மறக்காத உள்ளம் உடையவர். அதனால் குமரவேலை வற்புறுத்தி மதுரைக்கு ல அழைத்துக் கொண்டு வந்தார். குமரவேலும் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் அழகப்பர் விடவில்லை. இறுதியில் வேற்றூர் வாழ்க்கை இச் சமயத்திற்கு நல்லதே என்று கருதிய குமரவேல் வளவனுடன் மதுரைக்கு வந்தார்.

அழகப்பர் குமரவேலை நன்றாகப் பேணினார். “உங்கள் செல்வம்தான் இது: உங்களால் தான் முன்னுக்கு வந்தேன்: நீங்கள் வேறொன்றும் நினைக்க வேண்டாம்: இங்கேயே தங்கியிருக்கலாம். உங்களுக்கென வீட்டில் தனியறை ஒன்றை ஒதுக்கி வைக்கிறேன். எல்லா வசதிகளும் நான் கவனித்துக் கொள்கிறேன். வளவனுக்கும் கடையில் வேலை தருகின்றேன்' என்று கூறினார். குமரவேல் அழகப்பருடைய வீட்டிலும், கடையிலுமாகப் பொழுது போக்கினார். ஆனாலும் அவரால் பத்துப் பதினைந்து நாட்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்க முடியவில்லை.

வீட்டிற்குள் போகும் போதெல்லாம் தன் வீடு முன்னின்று வேதனை எழுப்பியது. மோட்டாரில் உட்கார்ந்த பொழு தெல்லாம் பழைய நினைவுபற்றி எரிந்தது. கடைக்குப் போகும் பொழுதெல்லாம் இடியால் தாக்கப்படுவது போல் அல்லல் அடைந்தார். அழகப்பரைக் கண்டுபேச ஆட்கள் வரும்போதும் போகும் போதும் பழுத்துக் காய்ச்சிய இரும்பை உடம்பில் செலுத்துவது போன்ற துயருக்கு ஆளானார். துன்பத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று எந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டாரோ அந்த இடமே கொடுந் துன்பக்களமாக மாறிவிட்டது. குமரவேலின் இடிந்த வாழ்க்கை மடிந்த வாழ்க்கையாக மாறிவிடக் கூடாதே என்று அழகப்பர் எவ்வளவோ தேற்றினார். தேற்றியது தான் மீதம், மனக்கவலையை மாற்ற முடியவில்லை. மாறவும் வழியில்லை. அதனால் வளவனை அவர் கடை யில் இருக்கச் செய்து விட்டு வெளியேறி விட்டார் குமரவேல்.

66 L

குமரவேல் நடந்துகொண்டே இருந்தார். ஒரு பக்கத்தி லிருந்து ாண் L டாண் என்று ஒலிக்கும் மணியோசை கேட்டது. ஒசை கேட்ட இடத்திற்குச் சென்று குமரவேலின் கால்கள் நின்றன. “முருகா முருகா” என்று ஒலிகேட்ட பின்னரே தான் வந்திருக்கும் இடம் பரங்குன்றத்து அறுமுகன் கோவில்