6
8
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
என்று தெரிந்து கொண்டார். உள்ளே நுழைந்தார்! உள்ளம் ஒன்றி நின்றார்! மனக்கவலையை மறந்தார்; மணிக்கணக்காக உட்கார்ந்துவிட்டு வெளியே வந்தார். பழைய கவலை மீண்டும் பற்றிக் கொண்டது. மீண்டும் உள்ளேபோய் முருகன் திருமுன்பு அமைதிதோய நின்றார். மனக்கவலை மாறக்கண்டார். சற்று நேரம் கழித்து வெளியே வந்தார். கவலையை மாற்றிக்கொள்ள வழிகண்டுவிட்ட மகிழ்ச்சியால் தள்ளப்பெற்றுத் தெருவில் நடந்தார்.
அ
வந்தது!அப்பொழுது
கவலை அவரைத் தொடர்ந்து வந்தது! அப்பொழுது அருகில் இருந்த தேங்காய்க் கடையில் நின்று கொண்டிருந்த ஒரு கிழவியின் குரல் காதில் விழுந்தது. “அநியாய விலை! கோவில் தேங்காயின் பேரால் கொள்ளையா அடிப்பது? இரண்டு பங்கு மூன்று பங்கா விலை?" இக்குரலை கேட்டபின் வயிற்றுக் கவலையைப் போக்கவும் வழி கண்டுவிட்டார் குமரவேல்.
வ
கணக்கர்களையும், ஏவலர்களையும் வைத்து வாணிகம் செய்த செல்வர் குமரவேல் தேங்காய், பழம், பத்தி, சூடன் ஆகியவற்றை இரண்டு மூன்று ரூபாய்களுக்கு வாங்கி வைத்துக் கொண்டு நடுத்தெருவில் உட்கார்ந்துவிட்டார். குறைந்த லாபம் வைத்து விற்றார். தம் வயிற்றுத்தொல்லையைத் தீர்க்கும் அளவு வருமானம் கிடைத்தால்போதும் என்பதே அவர் எண்ணம். ஆனால் ஒரு மாதத்துள் குமரவேல் தெருவைவிட்டு ஒரு கடைபோட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. சுருக்க இலாபம்! பெருத்த விற்பனை! நல்ல வருமானம். வளவனையும் அழைத்துத் தேங்காய்க் கடையில் வைத்துக் கொண்டார். தந்தையும் மகனுமாகக் கடையைக் கவனித்துக் கொண்டனர். வேலையாள் மட்டும் வைக்கவில்லை;
ன்
மாலை ஐந்து மணி வரை குமரவேல் வளவனு தேய்காய்க் கடையில் இருப்பார். அதற்குப்பின் வளவனே கடைக்குப் பொறுப்பாளி. ஐந்து மணி எப்பொழுது வரும் என்று குழந்தைகள் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பர். நேரம் வந்துவிட்டால் போதும்: தேங்காய்க் கடைமுன் கூடிவிடுவார். குமரவேல் பெரிய பால் தவலையுடன் வருவார். குழந்தைகள் கொண்டாட்டத்தைப் பார்க்க வேண்டுமே! சிறுவர்களின் குவளைகள் நிரம்பி வழியும்! மகிழ்ச்சியும் நிரம்பி வழியும்! அவர்கள் ஆசையுடன் பால் குடிப்பதைக் கண்டு குமரவேலின் உள்ளமும் பொங்கி வழியும்! தேங்காய்க் கடை ஊதியம் எல்லாம் குழந்தைகளுக்கு பாலாக மாறியது. குமரவேலின்