திருக்குறள் கதைகள்
7
சயலைப் பாராட்டாதவர் இல்லை. ஆனால் தேங்காய்க் கடைக்காரர்களுக்கு மட்டும் முணு முணுப்பு உண்டு. அது இயற்கைதானே! தாம் நல்லது செய்ய முடியாவிட்டாலும், பிறர் செய்யும் நல்லதையும் பலரால் பொறுத்துக்கொள்ள முடிவது இல்லையே! என்ன செய்வது? மனக்கவலையை மாற்றும் வழி கண்ட குமரவேல் இதற்குச் சளைத்துவிடுவாரா?
ப
பள்ளிப் பிள்ளைகள் பத்துப் பதினைந்து பேருக்கு இரவுப் பாடம் சொல்லி வந்தார் குமரவேல். படிக்க இடவசதியோ, விளக்கு வசதியோ இல்லாத பிள்ளைகள் அவர்கள். அப் பிள்ளைகளோடு பிள்ளையாகத் தாமும் சேர்ந்து குமரவேல் பாடம் சொல்லித்தரும் அழகே தனி. பிறவி ஆசிரியர், இவர் தானோ என்று தோன்றும். காரணம் ஏனோ தானோ என்று வேலை ல செய்பவரா அவர்? அவர்? தெய்வத் தொண்டாகவே கருதிவிட்டார் அல்லவா? இப்பொழுதுதான் அவரது வாழ்க்கை கவலையற்ற வாழ்க்கையாக இன்ப வாழ்க்கையாக ஆகிவிட்டது. - -ஆ ஒன்றன்பின் ஒன்றாக இக்காட்சிகள் நினைவுக்கு வரவே ன்பம் இன்பம் ன்பம்" என்று கூச்சலிட்டுக் காண்டு எழுந்தார். தாம் தூணில் சாய்ந்து உறங்கிவிட்டது நினைவுக்கு வந்தது. அவரைக் காணவில்லையே என்று தேடி வந்த அரசப்பன் முன் நின்றான். "ஐயா! படிப்பதற்கு எல்லோரும் வந்து விட்டார்கள்! உங்களை நெடுநேரமாய்க் காணவில்லையே என்று தேடி வந்தேன்” என்றான். விரைவாக நடந்தார் குமரவேல்.
66
இன்று என்ன பாடம் பார்க்கவேண்டும் என்று மாணவர் களிடம் கேட்டார் குமரவேல் “தனக்குவமை இல்லாதான் தான்சேர்தார்க் அல்லான். மனக்கவலை மாற்றல் அரிது’ என்னும் திருக்குறள் என்றான் அரசப்பன். இப்பாடலுக்கு விளக்கம்கூற எங்கேயோ தேடிச் செல்ல வேண்டுமா? குமரவேல் வரலாறே இதுதானே. தனக்கு உவமை இல்லான் தாளைச் சேர்ந்தார்! மனக்கவலை மாற்றிக்கொண்டார். அழகப்பர் அன்பால் மாற்றமுடியாத கவலை அறுமுகன் பற்றால் மாறிவிட்டதல்லவா!