194
இளங்குமரனார் தமிழ்வளம் – 8 $
பேசிக்கொள்கிறார்கள்போல் இருக்கிறது. ஏதோ நம்மால்
முடிந்தது.
பொன்
எவ்வளவு நல்ல காரியம்! நம்மால் முடிந்தது
என்று சாதாரணமாகச் சொல்லுகிறீர்கள்.
66
தம்பி, இது என்ன அட்டை? எச்சரிக்கையாயிரு; தொண்டனாயிரு” என்று எழுதி வைத்திருக்கிறீர்கள்.
வடி பொன்
இது வாழைப்பழத்தோல் தந்த பாடம்!
அது என்ன தம்பி?
“ஒல்லும் வகையால் அறிவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல்"
திருக்குறளா?
வடி ஆமாம்! வாழ்க்கை தந்த பாடம் அது. நான் எச்சரிக்கையாகப் போயிருந்தால் விழுந்திருக்க மாட்டேன்; அதனால் எச்சரிக்கையாக இருத்தல் தேவை என அறிகிறேன். விழுந்து நான் பட்ட தொல்லைதானே மற்றவர்களும் ம் படுவார்கள் என்ற எண்ணம் தொண்டு புரியத் தூண்டியது. எவ்வாறு தொண்டு புரிவது என்று நினைத்த வேளையிலே இன்ன வழி, இன்ன வகை, இன்ன நேரம் என்று இல்லை. எப் பொழுதும் எவ்வழியிலும் எவருக்கும் நல்வினை செய் என ஏவியது குறள் மணி. அதனால் இவைகளை நினைவாகப் பொறித்து வைத்துள்ளேன்.
பொன்
நல்ல காரியம் தம்பி! நான் உங்களுக்கு
வேண்டியதைச் செய்கிறேன்.
வடி
பான்
மிக்க நன்றி.
அப்பா
வெளியில்
போல் இருக்கிறது.
வடி பொன்
வடி
போயிருக்கிறார்
ஆமாம்! அவர்தானே பெரிய தொண்டர்!
சரி சரி! நல்ல குடும்பம்! வருகிறேன் தம்பி. வணக்கம்.