திருக்குறள் கதைகள்
197
வணங்க செயல்திறம் அல்லது வினையாண்மை வேண்டு மல்லவா! நம் இளைஞனிடம் மிகுதியாக அமைந்திருந்தது வினைநலம்!
ளைஞன் காளையானான்; ஆற்றல் பேராற்றல் ஆயிற்று; வினைத்திறம் விஞ்சியது; காவிரிக்கரையிலே உலவிய அவனுக்கு, கரை புரண்டு செல்லும் வெள்ளத்தைக் கண்ட அவனுக்கு வாய்க்கால், வரப்பு, வயல் அழிக்கப்பட்டு வெள்ளத்தால் கெடுவதையும், துளிநீரும் இன்றி வறண்டு வானோக்கி ஒருபால் காடு கிடப்பதையும் நோக்கிய அவனுக்கு, நூலொடு நுண்ணறிவும் வாய்த்த அவனுக்கு ஓரெண்ணம் உண்டாயிற்று! காவிரிக்குக் கல்லால் அணைகட்ட வேண்டும் என்பதே அது.
சால்லால் அணைகட்டினான் சோழன்! கல்லால் அணைகட்டினர் தொழிலாளர்; நெல்லால் அணைகட்டினர் உழவர்; அல்லல் பறந்தது. அமைதி நிறைந்தது; சோழநாடு சோழவள நாடு ஆயிற்று; சோழன் வளவன் ஆனான்; காவிரி பொன்னி யாயிற்று!
சோழவளநாடு சோறுடைத்து என உண்மை உரைக்கவும், யானை வயலுள் புகுந்தால் நெற்பயிர் அதனை மறைக்கும் என உயர்வு உரைக்கவும், ஒரு பெண்யானை படுக்கும் இடம் ஏழு ஆ ண் யானைகளுக்கு உணவு தந்து காக்கும் எனப் புனைந்துரைக்கவும் ஆயிற்று சோழநாடு.
வாழ்க சோழன்' என்று வாழ்த்துவோர்களின் ஓங்கிய குரலுக்கு இடையே, 'ஒழிக' என்போர் உதட்டு அசைவும் இல்லையாயிற்று. பற்றியெரிக்கும் பசியுண்டானால் அன்றோ சுற்றியிருப்போர் தூண்டுதலுக்கு மக்கள் செவிசாய்ப்பர்? பொன்மலையாய் நென்மலை காட்சி தரக்கண்டோர் பொய்ப் பழியோர் மொழிக்கு இசைவாரோ?
சோழநாட்டில் ஆணை செலுத்திய வேந்தன் இமயம் வரை தன் கொடி பறக்க விரும்பினான். தீர எண்ணித் தெளிந்த முடிவு கொண்டு, எண்ணிய வண்ணமே செய்து முடிக்கும் திண்மை பெற்றவனுக்கு முடியாத செயலென ஒன்றுண்டா? இமயப் பெருமலையில் சோழன் புலிக்கொடி வீறுடன் பறந்தது; வெற்றிக் களிப்போடு மீண்டான் வேந்தன்.
ன்
குறுநில மன்னரும், பெருநில வேந்தரும் சோழன் அடிக் கீழ்ப் பணிந்து நின்றனர்; அடிபட்டதற்கு அடையாளமாக அரும்பொருள்கள் குவித்தனர்; கலைஞர்கள் ஆடிப்பாடி