198
இளங்குமரனார் தமிழ்வளம் - 8
இன்புறுத்தினர்; கவிஞர்கள் இறவா உடலாம் எழிற் கவிகள் பாடிப் பெருமை செய்தனர்; வடநாட்டு வெற்றியால் பெற்ற உவப்பினும், தன்னாட்டுப் பாராட்டுக்கு மகிழ்ந்தான் சோழன்; பொன்னி நதிபோல் பொருள் வழங்கினான். ஒரே ஒரு புலவன் 301 அடிகளைக் கொண்ட 'பட்டினப்பாலை' பாடிய புலவன் - கடியலூர் உருத்திரங்கண்ணன் அந் நூலுக்காகப் பெற்ற பரிசில் பதினாறு நூறாயிரம் பொன்! ஏனையோர் பெற்ற பரிசு? எவர்
கண்டார்?
ரண்டாயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த அவன், மக்கள் வாழ வாழ்ந்த அவன், இன்றும் வாழ்கின்றான் நல்லோர் இதயத்தும், காவிரிக் கல்லணையில் நிற்கும் கல்யானை மீதும்!
கல்யானை மீதிருக்கும் அக் காவல் யானை யாவன்? அவனே கரிகாலன்! வாய்த்த துணை நலமும், வளர்ந்த வினைநலமும் ஒருங்கெய்திய சோழன் கரிகாலன் புகழ் வாழ்க!
அ
66
'துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.”