யார்?
27. நிறுத்து போரை!
மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்க நிற்கின்றார்கள்; யார்?
தந்தையும், மைந்தரும்!
ஏன்?
தாய் நெஞ்சிற்குக் காரணம் உண்டு; பேய் நெஞ்சிற்குக் காரணம் உண்டோ?
தீய பழக்கம், தீயோர் உறவு, தெளிந்த அறிவின்மை, தூண்டுதலைக் கேட்கும் மனம், துடிக்கும் உணர்வு போதாவா பகைத்து நின்று பழி செய்ய!
அவை
வை
நல்லவன் தந்தை - வல்லமையும் அவனுக்கு மிகவுண்டு; அறநெறிக்கு அஞ்சுபவன் அவன் - மறப்போருக்கு அஞ்சாமையும் அவனுக்கு இயல்பு; அமைதி வாழ்வை விரும்புபவன் அவன் அடக்குமுறைக்கோ அழிசெயலுக்கோ உடன்பட் டறியான்; உடன்படுவோரையும் விடான்; கொற்றவன்தான் அவன் என்றாலும் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகக் காப்பான் - குறை கண்டானோ கொதிப்படைவான்!
இத்தகைய நற்பண்புத் தந்தையும், தீமையே வடிவான மைந்தரும் போர்க்களத்தில் நிற்கின்றனர். யானையும், குதிரையும், தேரும் காலாளும் தத்தம் கடமைகளை ஆற்றுதற்குக் காத்திருக்கின்றன. ஏவிவிட்டோர் இறுமாந்திருக்க ஏனையோர் ஏங்கியிருக்க, ஆணையை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கின்றன இருதிறப் படைகளும்.
ள
“வயலிலே நெல்லைப் பயிரிட வேண்டாம். கட்டிக் காவல் புரிய வேண்டாம்; களை எடுக்கவும் வேண்டாம்; நீர் பாய்ச்சவும் வேண்டாம்; புல்லைப் பயிரிட வேண்டும்; பொருந்தும் உரம் இட வேண்டும்; பொழுதும் சென்று போற்றிக் காத்தல் வேண்டும் என்று கூறுவது புன்மை யல்லவா! இத்தகு புல்லியர்களும் உள்ளனரே நாட்டில்; அவர்களுக்குத் துணை
-