22
இளங்குமரனார் தமிழ்வளம் - 8
வ சரி.
66 என்ன உளறுகிறாயா? இதுவரை சொன்னவை இரவிலே வெட்டிப் புதைக்கப்பட்ட மருதப்பன் விடியற் காலையில் உயிரோடு போலீசு வண்டியில் எப்படி வரமுடியும்?" என்றான் சின்னச்சாமி.
66
அதுதான் வினை” என்று தொடர்ந்தான் மலையப்பன்.
குழி தோண்டிக்கொண்டிருக்கும்போது நான் வீட்டுக்கு வந்து விளக்கு எடுத்துக் கொண்டு போனேன் இல்லையா? அதற்குச் சிறிது முன்னாகவே விழித்துக் கொண்டிருக்கிறான் மருதப்பன். முதலாவது என் மைத்துனர்கள் காண்டு வந்த கம்பியும் மண் வெட்டியும் ஒன்றோடு ஒன்று தட்டி. “டங்ங்” என்னும் ஓர் ஒலி உண்டாகியிருக்கிறது. அதிலேயே மருதப்பன் விழித்துக்கொண்டானாம் அதன்பின் “கட்டிலிலே படுத்திருக்கிறானே அவன்தான்” என்று அறிமுகம் செய்து வைத்தேன் அல்லவா! அது அவனுக்குத் திகைப்பு ஏற்படுத்தி யிருக்கிறது. ஏற்படுத்தாமல் என்ன செய்யமுடியும்? அந்த மையிருட்டு? அதற்கு மேலும் வெளிச்சம் போட்டுவிட்டது நான் விளக்கு எடுத்துக் கொண்டு போனது. கட்டிலிலிருந்து எழுந்து வீட்டு முற்றத்திற்கு வந்திருக்கிறான் மருதப்பன். குழி வெட்டுவது தெரிந்திருக்கிறது. தனக்குத் தான் அது என்பதைச் சிறிதும் ஐயம் இல்லாமல் துணிந்திருக்கிறான். அதனால் வேப்ப மரத்தின் மீது ஏறி, செறிவான கிளைகளுக்கிடையே அமைதியாக உட்கார்ந்திருக்கிறான்” என்றான் மலையப்பன்.
“அப்படியானால், வெட்டிவிட்டோம்; வேலை முடிந்து விட்டது என்று பொய் சொல்லிவிட்டு உன் மைத்துனர்கள் போய்விட்டார்களா?” என்றான் சின்னச்சாமி.
66
'அவ்வாறானால், குற்றமில்லையே! காலையிலேயே நகருக்குச் சென்ற என் மகன் இரவு, முதல் காட்சி சினிமா பார்த்துவிட்டு நடந்து வந்திருக்கிறான். உறக்கமும் களைப்பும் உருத்துத்தள்ள ஓய்ந்துபோய்க் கட்டிலிலே சாய்ந்திருக்கிறான்.
"ஐயையோ! உன் மகனையே கொன்று விட்டார்களா?"
என்று ஓங்கிக் கத்தினான் சின்னச்சாமி.
"யாருக்கோ கேடு நினைத்தேன். அது எனக்கே விடிந்தது. முன்னிரவு அடுத்தவனுக்குக் கேடு நினைத்தேன். பின்னிரவு வரவில்லை. எனக்குக் கேடு வந்துவிட்டது. இனி அழுது அழுது புண்ணானாலும் பயன்படுமா?” என்று பெருமூச்சுடன் கூறிமுடித்தான் மலையப்பன்.