உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் கதைகள்

21

உன்னையும் ஒரு பெண்தானே பெற்றெடுத்தாள்? நீ ஒரு மனிதன் தானா?” என்று இடைவிடாது இடித்துக் கேட்பதாக இருந்தது. 'ஐயோ! ஐயோ என்று கதறிக்கொண்டே வீட்டு முற்றத்தை டு அடைந்தேன். முற்றத்து வேப்பமரம் அசைந்தது: காற்று தாழ்வார ஒலையைச் சுழற்றி ஆட்டியது. அது எனக்குப் பேய்க் குரலாகத் தெரிந்தது. அஞ்சாத நான் அஞ்சி அஞ்சிச் செத்தேன்: தாழ்வாரக் கட்டிலைக் கண்டதுதான்! ஐயகோ! கண்ணைத் திருப்பாது வீட்டுக்குள் ஓடிப்போய், படுக்கையில் விழுந்து கொண்டேன். என் உடையை வியர்வை நனைத்தது! மூடிய இமை திறக்கவில்லை: உறக்கமும் வரவில்லை! பொழுது மட்டும் விடிந்தது என்று வாய் தளதளத்துப் போய்க் கண்ணீர் கன்னங்களை நனைக்கக் கூறினான் மலையப்பன்.

"கொடுமைதான்! அழிவு வரும்போது அறிவு போய் விடுகிறது. கெடுங்காலம் வரும் போது என்ன செய்வது?” என்று தொண்டை கப்பிய குரலிலே பேசினான் சின்னச்சாமி 'அதன்பின் என்னவாயிற்று" என்றான்.

66

முகத்தைத் துடைத்து அழுகையை ஒருவாறு சமாளித்துக் கொண்டு பேசினான் மலையப்பன்.

66

விடிந்தது: என் இதயம் இடிந்துவிடும் போல் இருந்தது. வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன். போலீசு வண்டி வீட்டின் முன் நின்று கொண்டிருந்தது. போலீசுக்காரர்கள், இன்சுபெக்டர் ஆகியோர் கைத்துப்பாக்கி, பெருந்துப்பாக்கி, தடி, இவற்றுடன் வீட்டை வளைத்துக் கொண்டு நின்றனர்: அவர்களைக் கண்டு பதை பதைத்தேன். இரவிலே வந்த படபடப்பைப் பார்க்கிலும். அதிகமாகப் படபடப்பு ஏற்பட்டது. என்னை நானே நம்ப முடியவில்லை. 'எப்படி இந்த நடுக்காட்டில் நள்ளிரவில் நடந்த கொலைச் செய்தி இதற்குள் நகருக்குப் பரவி அங்கிருந்து அதிகாரிகள் வந்து விட்டார்கள்” என்ற திகைப்பிலிருந்து மீள நெடும் பொழுது ஆகிவிட்டது. அதுவரைப் பொறுத்திருப்பார்களா? கைகளிலே விலங்குமாட்டப் பெற்றது. என் மனைவி பணப்பெட்டிக்கும் விலங்கு மாட்டினார்கள்.

66

“உம், நட” என்று கையை வெளியே காட்டினார் அதிகாரி. அவருடன் நடந்தேன். ஐயையோ! பேயா? பூதமா? பிசாசா? ஒன்றும் இல்லை. இரவு எங்களால் வெட்டிக் கொல்லப்பட்ட மருதப்பன் போலீசு வண்டியிலே இருந்தான். நம்பமுடியுமா?