உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

66

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

இரண்டுகல் தொலைவுக்கு அப்பால் இருந்த ஊரில் என் மனைவிக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்கள் இருந்தனர். நல்ல முரடர்கள், கொலை களவுக்கு அஞ்சாதவர்கள். அப்படிப் பட்டவர்கள் உதவிதானே என் திருப்பணிக்குப் பயன்படும்! ஓடிப்போய் அவர்களை எழுப்பிக் காதோடு காதாகச் செய்தியைச் சொன்னேன். வேட்டை கிடைக்கிறது என்று விருப்பத்துடன் அரிவாள். மண்வெட்டி, கம்பி இவற்றோடு ஊர் அறியாமல் புறப்பட்டு வந்தார்கள். வீட்டு முற்றத்தே அவர்களை நிறுத்தித் ‘தாழ்வாரக் கட்டிலிலே படுத்திருக்கிறானே அவன்தான்' என்று சுட்டிக் காட்டினேன். அதற்குமேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. என்ன இருந்தாலும் நெருங்கிப் பழகியவன் இல்லையா மருதப்பன்: அவனை என் கண் முன் வெட்டிக் கொல்ல சம்மதிக்குமா? இருட்டறையில் பொல்லாததெல்லாம் எண்ணும் நெஞ்சம் வெளிச்சத்திற்கு வந்தவுடனே அப்படி எண்ண மறுக்கிறதே. அது எனக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா? எப்படியோ விரைவில் 700 ரூபாய்க்கு உரிமையாளனாக வழி கண்டுவிட்டேன்.

66

‘என் மைத்துணர்கள் சிறிது தொலைவு சென்று குழி தோண்டினார்கள். ஒரே இருட்டாக இருந்தது. சிறு வெளிச்சம் இருந்தால் சிறிது துணையாகும்போல் இருந்தது. விளக்கு மருதப்பன் பக்கத்தில்தான் எரிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது? நானே பூனைபோல் நடந்துபோய் விளக்கை எடுத்துக்கொண்டு குழி தோண்டும் டத்திற்குச் சென்றேன்.

அதன் பின் குழிக்குப் பக்கத்தில்கூட என்னால் நிற்க முடிய வில்லை. நெஞ்சம் படபடத்தது. இரத்தம் “குபு குபு” என்று ஒடத் தொடங்கியது. மயிர்க் கால்கள் நிமிர்ந்து. உடல் ஆடத் தொடங்கியது. வேறோர் இடத்திற்குப் போய்க் குப்புற விழுந்து கொண்டேன்.

"கொஞ்ச நேரம் சென்றது. சே! கோழை! வீட்டுக்குப்போ! எங்கள் வேலை முடிந்தது! ஒரே வெட்டிலே தீர்ந்தான்' என்று பரணிபாடிவிட்டுப் போயினர் என் மைத்துணர்கள்.

66

என்னால் தலையை நிமிர்த்தி நிற்க முடியவில்லை. மருதப்பன் என் முன்னால் நின்று ‘மலையப்பா நல்ல காரியம் செய்தாய்! அட பாவி! பணமா பெரிது! இந்தப் பணம் எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்லியிருந்தால் கூட விட்டிருப்பேனே. இதற்காக என்னைக் கொல்லவா வேண்டும். நீ மக்களோடு பிறந்திருக்கிறாயா? மக்களைப் பெற்றெடுத்திருக்கிறாயா?